வெண்பாவிற்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் ஷர்மிளா – ப்ரோமோ ரிலீஸ்! சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

0
வெண்பாவிற்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் ஷர்மிளா - ப்ரோமோ ரிலீஸ்! சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
வெண்பாவிற்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் ஷர்மிளா - ப்ரோமோ ரிலீஸ்! சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
வெண்பாவிற்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் ஷர்மிளா – ப்ரோமோ ரிலீஸ்! சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

வெண்பாவிற்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஷர்மிளா தீவிரமாக மாப்பிள்ளை தேடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் வெண்பா விக்ரமை திருமணம் செய்து கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவை எப்போது தான் பாரதி ஏற்றுக்கொள்வார் என சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி கண்ணம்மாவை வெறுத்து கொண்டிருக்கிறார். தற்போது வரைக்கும் லட்சுமி வேறொருவரின் குழந்தை தான் என பாரதி நம்பி கொண்டிருக்கிறார். கண்ணம்மா மீது தவறு இருக்காதோ, நாம் தான் கண்ணம்மாவை தவறாக நினைக்கிறோமோ என பாரதிக்கு தோன்றும் நேரமெல்லாம் வெண்பா வந்து வெறுப்பேத்தி பாரதியை வெறுக்க வைத்துவிடுகிறார்.

Exams Daily Mobile App Download

தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் எப்படியாவது இருவரையும் பிரிக்க வேண்டும் என வெண்பா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வேளையில் ஷர்மிளா தீவிரமாக இருந்து வருகிறார். ஏற்கனவே ஒரு மாப்பிள்ளை பார்த்த போது அவரது குணம் சரியில்லை என பல காரணங்கள் சொல்லி தட்டி கழித்தார். இதையே எத்தனை நாட்கள் செய்துகொண்டிருக்க போகிறார் என்பது தெரியவில்லை.

யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து வைப்பேன் ஆனால் பாரதியுடன் உன்னை நெருங்கவே விடமாட்டேன் என ஷர்மிளா நினைத்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்க வெண்பாவிற்கு ஷர்மிளா விக்ரமை வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தை வெண்பா என்ன சொல்லி தட்டி கழிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!