துர்காவை திருமணம் செய்யுமாறு வெண்பாவை வற்புறுத்தும் ஷர்மிளா – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

0
துர்காவை திருமணம் செய்யுமாறு வெண்பாவை வற்புறுத்தும் ஷர்மிளா - சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
துர்காவை திருமணம் செய்யுமாறு வெண்பாவை வற்புறுத்தும் ஷர்மிளா - சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
துர்காவை திருமணம் செய்யுமாறு வெண்பாவை வற்புறுத்தும் ஷர்மிளா – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா நான் சொல்லும் மாப்பிள்ளையை  தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் நிலையில், தற்போது வெண்பாவிற்கு துர்காவை திருமணம் செய்துவைக்க பிளான் போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதிக்கு எப்போது தான்  கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் குறைந்து கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளப் போகிறாரோ என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு இடையில் எவ்வளவுதான் கண்ணம்மாவை விட்டு பாரதி விலக நினைத்தாலும் விதி அவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறது. தற்போது கூட பாரதியுடன் சேர்ந்து தான் கண்ணம்மாவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டிருப்பதால் கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் பாரதிக்கு குறைய வாய்ப்பிருக்கிறது என வெண்பா அவர்களை பிரிக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து தற்போது இந்தியா வந்திருக்கிறார். வெண்பாவின் அம்மா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது எப்படியும் பாரதி உன்னை திருமணம் செய்யப்போவதாக இல்லை. நீ பாரதியை மறந்துவிட்டு, நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள் என வெண்பாவை மிரட்டுகிறார்.

இந்நிலையில் வெண்பா நீண்ட நாட்களாக கட்டிப்போட்டு வைத்திருந்த துர்கா வெண்பாவிடம் இருந்து தப்பித்து வந்து ஷர்மிளாவை சந்தித்துள்ளார். அதாவது வெண்பாவை தான் காதலிப்பதாகவும் நான் மருத்துவம் தொழில் தான் செய்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். உடனே ஷர்மிளாவுக்கு வெண்பாவை திருமணம் செய்து வைக்கலாம் என்கிற பிளான் வருகிறது. ஆனால், வெண்பா திருமணமே செய்யாமல் கூட இருப்பேன். ஆனால் துர்காவை மட்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here