துர்காவை வெண்பாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ள ஷர்மிளா – ப்ரோமோ ரிலீஸ்!

0
துர்காவை வெண்பாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ள ஷர்மிளா - ப்ரோமோ ரிலீஸ்!
துர்காவை வெண்பாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ள ஷர்மிளா - ப்ரோமோ ரிலீஸ்!
துர்காவை வெண்பாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ள ஷர்மிளா – ப்ரோமோ ரிலீஸ்!

வெண்பாவிற்கு விரைவில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஷர்மிளா நினைத்து கொண்டிருந்தார். இந்நிலையில் வெண்பாவினை துர்காவிற்கு திருமணம் செய்துவைக்க ஷர்மிளா முடிவெடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவின் சூழ்ச்சி எப்போது தான் பாரதிக்கு தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாரதியை வெண்பா கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து கொண்டிருக்கிறார். பின்பு பாரதி கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட விஷயத்தை வெண்பாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது இருவரையும் பிரித்து பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வெண்பா ட்ரை பண்ணி கொண்டிருக்கிறார்.

Jio வின் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் – இனி டேட்டா ஓவர் பிரச்சனை இல்லை! முழு விபரம் இதோ!

இருவரையும் பிரிக்க தான் கண்ணம்மா மீது சந்தேகம் வரும்படி செய்கிறார். பாரதியும் வெண்பாவின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு கண்ணம்மாவை விட்டு பிரிகிறார். இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்ணம்மா மீது சந்தேகம் குறையாமல் அவ்வப்போது பாரதியை ஏத்தி விட்டு கொண்டிருக்கிறார். தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வருவதால் இருவரையும் பிரிக்க பிளான் போட்டு கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வெண்பாவின் அம்மாவும் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருக்கிறார். ஆனால், எப்படியாவது பாரதியை மறக்க வைத்து வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஷர்மிளா பிளான் போட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில், வெண்பா கடத்தி வைத்திருந்த துர்கா ஷர்மிளாவை சந்தித்து வெண்பாவை காதலிப்பதாக கூறுகிறார். ஷர்மிளாவும் துர்காவை வெண்பாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார். வெண்பாவிற்கு இந்த விஷயம் தெரியவந்து அதிர்ச்சியடையும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here