சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பயிற்சியாளராக களமிறங்கும் தோனி? ஷேன் வாட்சன் கருத்து!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பயிற்சியாளராக களமிறங்கும் தோனி? ஷேன் வாட்சன் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பயிற்சியாளராக களமிறங்கும் தோனி? ஷேன் வாட்சன் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பயிற்சியாளராக களமிறங்கும் தோனி? ஷேன் வாட்சன் கருத்து!

அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பயிற்சியாளர் குழுவில் MS தோனி இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

MS தோனி

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து கிட்டத்தட்ட நாக்அவுட் ஆகி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த சீசனில் இன்னும் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே விளையாட இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியான தோல்வியுடன் மோசமாக துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடப்பு சீசனில் CSK அணியின் கேப்டன் பொறுப்பை வகித்து வரும் MS தோனி அடுத்த வருடங்களில் கேப்டனாக தொடருவாரா என சில கேள்விகள் எழுந்திருக்கிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் எதுவும் கிடைக்காது!

அதாவது அடுத்த சீசனிலும் மஞ்சள் நிற ஜெர்சியில் தோன்றுவதாக கூறி இருக்கும் MS தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராகவும், இல்லையெனில் வேறு ஏதேனும் ஒரு பொறுப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் இந்த வித்தியாசமான மஞ்சள் ஜெர்சி கருத்தை ஷேன் வாட்சன் தனது பார்வையில் இருந்து ஒரு சில கருத்துக்களை கணித்துள்ளார். இப்போது, வாட்சனின் கூற்றுப்படி 2023 ஐபிஎல் போட்டியில் தோனி வீரராக இல்லாமல், பயிற்சியாளராக ரசிகர்கள் அவரை பார்க்கலாம்.

இது குறித்து வாட்சன் கூறும் போது, ‘வித்தியாசமான மஞ்சள் (ஜெர்சி) என்று அவர் சொன்னபோது, அவர் விளையாடும் சட்டையை விட பயிற்சியாளர் சட்டையைப் பற்றி பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் விளையாடி முடித்த பிறகு CSK உடன் ஈடுபடுவதைத் தவிர வேறு ஏதாவது செய்தால் நான் அதிர்ச்சியடைவேன். இன்னும் நான் அவருடன் சில சமயங்களில் பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் நிறைய அரட்டையடித்தோம். பயிற்சியாளராக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டின் இயக்குனராக இருந்தாலும் சரி, அவர் CSK உடன் ஈடுபட விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும்.

Exams Daily Mobile App Download

அவர் அந்த வேலைக்கு மாறாவிட்டால் நான் அதிர்ச்சியடைந்து இருப்பேன். ஆனால் இப்போது எந்த அவசரமும் இல்லை. அவர் ஒரு வீரராக இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்துப்படி, தோனி அடுத்த சீசனில் CSK அணியின் பயிற்சியாளராக இருக்கலாம் என்று கணிப்புகள் எழுந்திருக்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு IPL போட்டிகளில் தோனி பயிற்சியாளராக இருந்தால் யார் அணியை வழிநடத்துவார் என்பதை தெரிந்து கொள்ள இப்போதே ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here