தமிழக காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் கவனத்திற்கு – டிஜிபி உத்தரவு!
தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி உத்தரவு:
தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சி.சைலேந்திர பாபு அவர்கள் ஜூலை 1 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். ஏற்கெனவே இவர் டிஜிபி அந்தஸ்தில் ரயில்வே பிரிவு டிஜிபி ஆக பணியாற்றி வந்தவர். காவல்துறையில் பல்வேறு பதவிகளையும், குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர். இவர் பொறுப்பேற்ற பின்னர் போலீசாருக்கு வார விடுமுறை உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிப்பு பணி!
தற்போது காவல்துறையில் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவண பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்பி, டிஐஜி, ஐஜி அலுவலகங்களில் ஏராளமான அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் காவல்துறையினருக்கு சம்பளம் வழங்குதல், உத்தரவு ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக பிரிவு பணிகளை செய்கின்றனர்.
அந்த வகையில் காவல் அலுவலக பணியாளர்களான சூப்பிரண்டுகள், டைப்பிஸ்ட்டுகள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், அலுவலக இளநிலை உதவியாளர்கள் ஆகிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட பணித்திறன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதில் சிறப்பாக பணிபுரியும் நபர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
TN Job “FB
Group” Join Now
அமைச்சுப் பணியாளர்களின் பணி தொடர்பான ஆய்வறிக்கையை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் அந்தந்த காவல் தலைமை அதிகாரியிடம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.அவர்களது பணித்திறன் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள மாவட்ட எஸ்பிக்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்களுக்கு, டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.