போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

0
போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றக் காவல்:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோவாவிற்கு 3 நாட்கள் சொகுசு கப்பலில் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வந்தது. குறிப்பாக அங்கு நடக்கும் விருந்தில் போதை மருந்துகள் பயன்படுத்தப்படும் என்றும் தகவல் வந்தது. இந்த சொகுசு கப்பலில் அதிக வசதி படைத்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என்று பலரும் கலந்து கொள்வது வழக்கமாகும்.

IPL 2021 – KKR vs RR: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

இந்த சொகுசு கப்பலில் ஒருவர் பயணிக்க ரூ.10 லட்சம் டிக்கெட் என்று அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சாதாரண மக்களை போல் அந்த சொகுசு கப்பலில் டிக்கெட் எடுத்து பயணித்தனர். கப்பல் அரபிக்கடலில் பயணிக்க தொடங்கியதும் பலரும் போதைப்பொருட்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்த தொடங்கினர்.

அடுத்த 3 மாதங்கள் அதிக கவனம் தேவை – சுகாதார செயலர் எச்சரிக்கை!

அதன்பின்னர், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா மற்றும், இது தொடர்பான மற்ற சிலரும் என்று மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஆர்யன் கானின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு அக்டோபர் 7ம் தேதியான இன்று வரை காவல் துறையினரின் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இன்று விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அக்.15முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

அதில், ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அடுத்த 14 நாட்களுக்கு ( அக்டோபர் 21) வரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை விசாரணைக்கு ஆர்யன் கான் உள்ளிட்ட நபர்களை வரும் 11ம் தேதி வரை அனுமதிக்க கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. மேலும், ஆர்யன் கான் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!