‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ஷாக்கிங் ப்ரோமோ!

0
'ராஜா ராணி 2' சீரியலில் சந்தியாவாக 'செம்பருத்தி' ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ஷாக்கிங் ப்ரோமோ!
'ராஜா ராணி 2' சீரியலில் சந்தியாவாக 'செம்பருத்தி' ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ஷாக்கிங் ப்ரோமோ!
‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ஷாக்கிங் ப்ரோமோ!

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் தற்போது சந்தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸாவுக்கு பதிலாக, ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ நடிகை ஷபானா நடிக்க இருப்பதை போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

ராஜா ராணி 2

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ஒரு முக்கியமான சீரியல் ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானஸா இருவரும் காதலித்து, திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இந்த நட்சத்திர ஜோடி தான் தமிழ் சின்னத்திரையில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கும் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இப்போது இந்த ‘ராஜா ராணி’ சீரியலுக்கு கிடைத்த வரவேற்புகளை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வேறு ஒரு கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – சூரத் விசிட்! ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வாரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகை ஆலியா மானஸா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வர, இவருக்கு ஜோடியாக நடிகர் சித்து நடித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த அதே அளவு வரவேற்புகள் இந்த ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கும் கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இப்படி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த சீரியலில் புதிய அறிமுகம் ஒன்று ஏற்பட இருப்பதாக எடிட் ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

ஜெனியை மரியாதை இல்லாமல் பேசும் இனியா, கோவத்தில் அடித்த பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

அதாவது ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகை ஆலியாவுக்கு பதிலாக ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் நடிக்க இருப்பதாக ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோ பக்கா எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருக்கின்ற போதிலும், இப்படி ஒரு கதைக்களம் இருந்தால் சீரியல் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here