செம்பருத்தி’ ஷபானாவின் திடீர் திருமணத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
செம்பருத்தி' ஷபானாவின் திடீர் திருமணத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
செம்பருத்தி' ஷபானாவின் திடீர் திருமணத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
செம்பருத்தி’ ஷபானாவின் திடீர் திருமணத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ நடிகை ஷபனாவுக்கு எளிமையான முறையில் இனிதே நடைபெற்ற திடீர் திருமணம் தற்போது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷபானா திருமணம்

சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஆர்யனுக்கும் நடிகை ஷபானா ஷாஜகானுக்கும் நடைபெற்ற திருமணம் தான் சின்னத்திரையின் முக்கிய பேச்சாக இருந்து வருகிறது. தடல் புடலாக இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற நடிகை ஷபானாவின் திருமணம் ரசிகர்களிடையே சில சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் ஷபானா, சைத்ரா, நக்ஷத்திரா, ரேஷ்மா ஆகிய நால்வரும் நல்ல தோழிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான்’ கலாய்க்கும் ரசிகர் – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இவர்கள் ஜீ தமிழ் சீரியல்கள் மூலம் நண்பர்களாக மாறியுள்ளனர். இவர்களில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரை தொடர்ந்து நடிகை ரேஷ்மா, நடிகர் மதனை காதலித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஜோடிக்கு முன்னதாக நடிகை ஷபானா, நடிகர் ஆர்யன் திருமணம் சமீபத்தில் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

சென்னையில் கொட்டும் மழையிலும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யனின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமண நிகழ்வில் பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு திருமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இருந்தாலும் நடிகை ஷபானா தனது திருமணம் குறித்து எவ்வித தவல்களையும் முன்னறிவிக்காத பட்சத்தில் இது திடீர் திருமணமாக நடைபெற்றதா என ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் ஆ? கமல்ஹாசன் தந்த விளக்கம்! ப்ரோமோ ரிலீஸ்!

இப்போது நடிகை ஷபானாவின் இந்த திடீர் திருமணம் குறித்த பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ஷபானா ஷாஜகான் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருக்க அவர் நடிகர் ஆர்யனின் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதாவது நடிகர் ஆர்யன் இந்து என்பதால் இந்த திருமணத்துக்கு ஷபானாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனவும், அவர்கள் நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. என்றாலும் இது குறித்து நடிகை ஷபானா விரைவில் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!