விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஷபானா – வெளியான ப்ரோமோ!

0
விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஷபானா - வெளியான ப்ரோமோ!
விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஷபானா - வெளியான ப்ரோமோ!
விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஷபானா – வெளியான ப்ரோமோ!

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷபானா, தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள செல்லப்பிள்ளை என்னும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

செல்லப்பிள்ளை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அனைத்துமே ஒரு குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை தான் படம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை தெரிந்துகொண்டு அவ்வப்போது புது புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். டிஆர்பியிலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசியமான தகவல்கள்!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் செல்லப்பிள்ளை என்கிற புதிய நெடுந்தொடர் அறிமுகமாக இருக்கிறது. இந்த செல்லப்பிள்ளை சீரியலில் ஜீ தொலைக்காட்சியில் பிரபலமான செம்பருத்தி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் ஷபானா நடிக்கவுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஷாபனா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆர்யனை திருமணம் செய்துகொண்டார். செம்பருத்தி சீரியலும் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக டாப் ரேஞ்சில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஷபானா செல்லப்பிள்ளை சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவருக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியலின் முன்னாள் கதாநாயகன் கார்த்திக் நடிக்கவுள்ளார். செம்பருத்தி சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே இருவரின் ஜோடிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது மீண்டும் செல்லப்பிள்ளை சீரியல் முலமாக இணையவுள்ளனர். பாவப்பட்ட பெண்ணின் கதையாக இந்த சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. செல்லப்பிள்ளை சீரியல் எப்போது ஒளிபரப்பப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!