சென்னை SETS நிறுவனத்தில் ரூ.1,03,123/- ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
சென்னை SETS நிறுவனத்தில் ரூ.1.03,123/- ஊதியத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
சென்னை SETS நிறுவனத்தில் ரூ.1.03,123/- ஊதியத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
சென்னை SETS நிறுவனத்தில் ரூ.1,03,123/- ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மின்னணு பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் (SETS) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ASP (Purchase Officer), ASP (Stores Assistant) ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Society For Electronic Transaction And Security (SETS)
பணியின் பெயர் ASP (Purchase Officer), ASP (Stores Assistant)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

மின்னணு பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் பணியிடங்கள்:

மின்னணு பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில் (SETS) ASP (Purchase Officer) மற்றும் ASP (Stores Assistant) ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

SETS கல்வி விவரம்:

 • ASP (Purchase Officer) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Material Management பாடப்பிரிவில் MBA அல்லது Postgraduate Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
 • ASP (Stores Assistant) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree, Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Administration / Account போன்றவற்றில் அரசு இட்ட விதிமுறைகள் மற்றும் திட்டங்களை பற்றி தெரிந்தவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

SETS அனுபவம்:

ASP (Purchase Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 15 வருடமும், ASP (Stores Assistant) பணிக்கு 10 வருடமும் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

SETS வயது வரம்பு:

 • ASP (Purchase Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 40 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • ASP (Stores Assistant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • SETS ஊதிய விவரம்:
 • ASP (Purchase Officer) பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,03,123/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
 • ASP (Stores Assistant) பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.48,455/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

SETS தேர்வு செய்யும் முறை:

 • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
 • Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான அழைப்பானது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

மத்திய அரசில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

SETS விண்ணப்பக் கட்டணம்:

 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 • SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்கள் ஆகிய விண்ணப்பதாரர்களிடம் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.SETS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த SETS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை 12.07.2022 என்ற கடைசி நாளுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SETS Notification Link

SETS Application Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here