சிறப்பு கட்டண ரயில்களுக்கான சேவை நீட்டிப்பு – முன்பதிவு தொடக்கம்!

0
சிறப்பு கட்டண ரயில்களுக்கான சேவை நீட்டிப்பு - முன்பதிவு தொடக்கம்!
சிறப்பு கட்டண ரயில்களுக்கான சேவை நீட்டிப்பு - முன்பதிவு தொடக்கம்!
சிறப்பு கட்டண ரயில்களுக்கான சேவை நீட்டிப்பு – முன்பதிவு தொடக்கம்!

சென்னையில் இருந்து தெலுங்கானா செல்லும் ரயில் மற்றும் செகந்திராபாத்தில் இருந்து மதுரை பின்னர் மதுரையில் இருந்து செகந்திராபாத் செல்லும் ரயில்களுக்கான சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை:

ரயில்களில் பேருந்துகளை காட்டிலும் கட்டண செலவு குறைவு என்பதாலும், நீண்ட தூரம் பயணம் செய்யும் போது சௌகரியமாக பயணம் செய்யலாம் என்பதாலும், கழிப்பறை வசதி இருக்கிறது என்பதாலும் பெரும்பாலான பயணிகள் ரயிலிலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும், பயணிகளின் சௌகரியதிற்கு ஏற்ற வகையில் அவ்வப்போது பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய பண்டிகை தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

மேலும், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே முன்பதிவு செய்து கொள்ளும் படியான வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் போக்குவரத்துக்காக சில முக்கிய ரயில்களின் சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது என்னென்ன ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதற்கான முழு விளக்கத்தையும் பார்க்கலாம். முதலில், சென்னையில் இருந்து புறப்பட்டு தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர்கள் & மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

அதே போல, செகந்திராபாத்தில் இருந்து மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரைக்கும் நீடிக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், செகந்திராபாதில் இருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 9:25 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும் எனவும், மதுரையில் இருந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here