‘பாரதி கண்ணம்மா’ உட்பட விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்? பிக் பாஸ் எதிரொலி!

0
'பாரதி கண்ணம்மா' உட்பட விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்? பிக் பாஸ் எதிரொலி!
'பாரதி கண்ணம்மா' உட்பட விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்? பிக் பாஸ் எதிரொலி!
‘பாரதி கண்ணம்மா’ உட்பட விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்? பிக் பாஸ் எதிரொலி!

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மற்ற சீரியல்களில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீரியல்கள் நேரம் மாற்றம்:

விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக பிரைம் டைம் சீரியல்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும். இந்த ஆண்டு சீசன் 5 வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு துவங்கி 10.30 மணி வரை ஒளிபரப்பப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் வரும் எலிமினேஷன் தொடர்பான எபிசோட்கள் மட்டும் 9 முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும்.

லட்சுமி அம்மாவை சீரியலில் இருந்து தூக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழுவினர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால் இந்த சீசனில் இரவு 8 மணி அல்லது 8.30 மணிக்கு துவங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நேரம் மாற்றப்படலாம். இதனிடையே இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் விஜே ஜாக்குலின் நாயகியாக நடிக்கும் தேன்மொழி பிஏ சீரியல் செப்டம்பர் இறுதியுடன் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் வரும் எலிமினேஷன் எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்பதால், முக்கிய சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பாதிக்கப்படாமல் இருக்க, டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல்கள் இனி சனிக்கிழமை ஒளிபரப்பாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VJ பிரியங்கா, மணிமேகலை YouTube மூலம் ஈட்டும் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

அந்த சீரியல்கள் இனி திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகரிக்க மற்ற ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமே இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சீரியல் நேரம் மாற்றம் செய்யப்படும் என்ற தகவலால், சீரியல் ரசிகர்கள் தங்களின் விருப்பமான சீரியல்கள் ஒளிபரப்பாகும் புதிய நேரம் குறித்து எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்துடன் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!