பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு தலையில் ஏற்பட்ட காயம் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

0
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு தலையில் ஏற்பட்ட காயம் - அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு தலையில் ஏற்பட்ட காயம் - அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு தலையில் ஏற்பட்ட காயம் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கம்பம் மீனா அவருக்கு தற்போது எதேர்ச்சியாக தலையில் அடிபட்டுள்ளது. அந்த அடி எப்படி ஏற்பட்டது என்பது குறித்தான விளக்கத்தை தற்போது ஒரு வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் மற்றும் ஹெல்மெட் போடுவதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளார்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியின் உண்மை முகம் தெரிய வருமா எனவும், ராதிகாவுடன் சண்டையிட்டு கோபி எனக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஷூட்டிங் போக மீதி நேரம் முழுவதையும் சமூக வலைத்தளத்தில் தான் செலவிட்டு வருகின்றனர். மேலும் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் மற்றும் இனியா இருவரும் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இவர்கள் சூட்டிங்கிற்கு வரும் போது ஏற்பட்ட அனுபவம் பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா சூட்டிங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியே செல்லும் ஒரு வீட்டில் இருப்பவர் அதிகாலை நேரத்தில் மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு அந்த மாம்பழக் கொட்டையை தூக்கி எறிந்து இருக்கிறார்.

செயற்கை முறை சிகிச்சை தோல்விக்கு பிறகு இயற்கையாகவே கருவுறும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

அந்த மாம்பழ கொட்டை கம்பம் மீனாவின் தலையில் பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. கம்பம் மீனா ஹெல்மெட் போடாததால் தான் அடி வாங்கி இருக்கிறார். தேவையற்ற பொருட்களை அவரவர் வீட்டு குப்பைத் தொட்டியில் போடுங்கள். அவசியமில்லாமல் வெளியிடங்களுக்கு வீசி மற்றவர்களை துன்புறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்கள் மற்றும் ஹெல்மெட் அவசியமாக போட வேண்டும் என்பதை இந்த வீடியோ மூலமாக வலியுறுத்தியுள்ளார்கள். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here