13 ஆண்டு திருமண வாழ்க்கை, இரண்டாவது பெண் குழந்தை – நடிகை நீலிமாவின் பயணம்!

0
13 ஆண்டு திருமண வாழ்க்கை, இரண்டாவது பெண் குழந்தை - நடிகை நீலிமாவின் பயணம்!
13 ஆண்டு திருமண வாழ்க்கை, இரண்டாவது பெண் குழந்தை - நடிகை நீலிமாவின் பயணம்!
13 ஆண்டு திருமண வாழ்க்கை, இரண்டாவது பெண் குழந்தை – நடிகை நீலிமாவின் பயணம்!

தமிழ் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நீலிமாவிற்கு கடந்த 5 ஆம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை நீலிமா ராணி:

சின்னத்திரையில் பல சீரியலில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் நடிக்க தொடங்கியது தேவர் மகன் படத்தில் தான். அதில் சிறு குழந்தையாக நடிக்க அறிமுகமாகி பின் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தமிழில் பல முன்னணி சீரியல்களான ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி போன்றவற்றில் நடித்திருக்கிறார்.

கர்ப்பமான கண்ணம்மாவுடன் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பாரதி – ரசிகர்கள் உற்சாகம்!

இவர் 2008ம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி இசை வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால் பல விமர்சனங்களை சந்தித்து இருப்பதாக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் வெற்றிகரமாக தன்னுடைய 13வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த அவர் பல மாடல் போட்டோஷூட்களை நடத்தி பிரபலமானார்.

நெட்டிசன்களிடம் சிக்கிய சன் டிவி “ரோஜா” சீரியல் – நியாயம் இல்லாத காட்சிகள்! வைரலாகும் மீம்ஸ்!

தற்போது கடந்த 5 ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அது பற்றி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே அவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அவருடைய அந்த பதில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here