கோமா நிலைக்கு சென்ற பிரபல சீரியல் நடிகர் – மீண்டு வர ரசிகர்கள் பிராத்தனை!

0
கோமா நிலைக்கு சென்ற பிரபல சீரியல் நடிகர் - மீண்டு வர ரசிகர்கள் பிராத்தனை!
கோமா நிலைக்கு சென்ற பிரபல சீரியல் நடிகர் - மீண்டு வர ரசிகர்கள் பிராத்தனை!
கோமா நிலைக்கு சென்ற பிரபல சீரியல் நடிகர் – மீண்டு வர ரசிகர்கள் பிராத்தனை!

தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான வேணு பிரசாந்த் மூளை கட்டி அகற்றம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கோமா நிலைக்கு சென்று விட்டார். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேணு அரவிந்த்:

நடிகர் வேணு அரவிந்த் (Venu Arvind) இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர். அதன் பின்னர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். சின்னத்திரையில் அனைத்து மக்கள் மனதிலும் மிகவும் பரிசித்தமானவர்.

சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

சின்னத்திரை மட்டுமல்லாமல், வெள்ளித்திரையிலும் அலைபாயுதே, வல்லவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேணு அரவிந்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்று விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் திரை பிரபலங்களும் அவர் மீண்டு வர வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!