விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் சீரியல் பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' இல் களமிறங்கும் சீரியல் பிரபலம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' இல் களமிறங்கும் சீரியல் பிரபலம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் சீரியல் பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 5 யில் பிரபல சீரியலில் நடிக்கும் நடிகர் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவியில் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் போக போக ரசிகர் பட்டாளம் பெருகியது. இதுவரை பிக்பாஸ் 4 சீசன் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் ஓவியா, ரம்யா பாண்டியன், லாஸ்லியா, போன்றவர்கள் பிரபலமடைந்து எண்ணற்ற ரசிகர்களை பெற்று நிறைய பட வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர். இதுவரை 4 சீசன்களும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கவுள்ளது.

சன் டிவி ‘ரோஜா’ சீரியல் மாமியார் கல்பனாவின் ரியல் ஸ்டோரி – ரசிகர்கள் ஷாக்!

இந்த முறை பிக்பாஸ் 5 புரோமோ வெளியாகி மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதில் பங்கு கொள்ளப்படும் போட்டியாளர்களின் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. ஜிபி முத்து, பிரியா ராமன்,வடிவுக்கரசி இதில் குக் வித் கோமாளி புகழ் கனி, சுனிதா, டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, அபினய், ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் நடிகை சந்தியா அவர்களும் பங்கு பெற போவதாக கூறுகின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் கவனத்திற்கு – அக். 3 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு தொடக்கம்!

இந்த நிலையில் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 ம் தேதி தொடங்க உள்ளது. யாரெல்லாம் சீசன் 5 யில் பங்கு கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!