2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கதாபாத்திரம் – சீசன் 2 தொடர்ச்சியா? ரசிகர்கள் கேள்வி!

0
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கதாபாத்திரம் - சீசன் 2 தொடர்ச்சியா? ரசிகர்கள் கேள்வி!
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கதாபாத்திரம் - சீசன் 2 தொடர்ச்சியா? ரசிகர்கள் கேள்வி!
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கதாபாத்திரம் – சீசன் 2 தொடர்ச்சியா? ரசிகர்கள் கேள்வி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது முடியாது எனவும் மேலும் சில வாரங்களுக்கு எபிசோடுகள் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனால் 2 ஆண்டுகளுக்கு முன் வந்த கதாபாத்திரங்கள் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அனைவரின் எதிர்பார்ப்பாக பாரதி எப்போது DNA டெஸ்ட் எடுப்பார் என்பது தான் இருந்தது. ரசிகர்களின் விருப்பப்படி DNA டெஸ்ட் எடுக்கப்பட்டு அனைத்து உண்மைகளும் வெளியாகி இருக்கிறது. மேலும் வில்லி வெண்பா செய்த தவறுகளுக்காக தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதி,கண்ணம்மா மீது சந்தேகப்பட்டதிற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

கண்ணம்மா மன்னித்து பாரதியை ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது. மேலும் இந்த சீரியல் இப்போதைக்கு முடியாது என்ற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அதனால் 2 ஆண்டுகளுக்கு பின் கண்ணம்மாவின் தாய் மாமா கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் நடித்த நிலையில், அதன் பின் அவருடைய கதாபாத்திரம் காட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவருடைய கதாபாத்திரம் காட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரே சீரியலில் 3 கதாநாயகிகள்.. விஜய் டிவியில் மாஸாக தொடங்கப்படும் புதிய நெடுந்தொடர்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி மற்றும் குழந்தை கனிஷ்கா ஆகியோர் புது என்ட்ரி கொடுத்து இருக்கின்றனர். அவர்களை வைத்து சீசன் 2 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கண்ணம்மா பாரதியை கண்டிப்பாக மன்னிக்கமாட்டார் எனவும், அதன் மூலம் சீசன் 2 கதைக்களம் அமைய இருப்பதாக ஒரு தகவலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!