தமிழகத்தில் நாளை (செப்.3) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.3) ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை செய்யப்பட உள்ளதாக என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன் பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை (செப்.3) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் செப்.08 தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதனால் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே. நகர், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.3) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
மேலும் கோட்டை மேடு, எட்டிவயல், ரகுநாதபுரம், அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல், பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளி மாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.3) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்