செப்.29 காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் – டெல்லியில் ஏற்பாடு!
கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் நிலையில், டில்லியில் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்க உள்ளது.
காவிரி நீர்:
தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதற்கு மறுத்துவிட்டது. இதனால் இரண்டு மாநிலங்களிலும் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 வது கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில் செப்டம்பர் 12ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. திடீரென்று கர்நாடக அரசு தண்ணீர் திற்பதை நிறுத்தியது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை – ஐகோர்ட் எச்சரிக்கை!
இதனால் இரண்டாவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழுவானது பரிந்துரை செய்தது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் வறட்சி நிலவி வருவதால் தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்துள்ளது. இதனால் டெல்லியில் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் காவிரி விவகாரம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.