இந்தியாவில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை – செப்.15 கடைசி நாள்!

0
இந்தியாவில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை - செப்.15 கடைசி நாள்!
இந்தியாவில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை - செப்.15 கடைசி நாள்!இந்தியாவில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை - செப்.15 கடைசி நாள்!
இந்தியாவில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை – செப்.15 கடைசி நாள்!

இந்தியாவில் 2023ம் ஆண்டிற்கான குடியரசு தின விழாவை முன்னிட்டு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளுக்கு பொது மக்களும் பரிந்துரைகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பற்றி பார்ப்போம்.

பத்ம விருதுகள்

இந்தியாவில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், தொழில்துறை, பொது விவகாரம், குடிமைப்பணி, வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் 2023ம் ஆண்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரைகளை கடந்த மே 1ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

இந்த பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை வருகிற செப்டம்பர் 15 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விருது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும். இதனை தொடர்ந்து தற்போது தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கும் வகையில் இவ்விருதுக்கான நபர்களை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என்று புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்களில் குறுகிய தூரம் பயணம் செய்ய முன்பதிவு முறை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

மத்திய அரசின் பல்வேறு வகையான தேசிய விருதுகளுக்கு ஒரே தளத்தின் கீழ் இணையப்பக்கம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தனிநபா் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2021, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் ,நிறுவனங்களுக்கான தேசிய விருதுகள், மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது உள்ளிட்ட 11 விருதுகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ள ஒரே இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை வெளிப்படை தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here