செப்.19 (நாளை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் – ஆயத்த பணிகள் தீவிரம்!

0
செப்.19 (நாளை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் - ஆயத்த பணிகள் தீவிரம்!
செப்.19 (நாளை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் - ஆயத்த பணிகள் தீவிரம்!
செப்.19 (நாளை) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் – ஆயத்த பணிகள் தீவிரம்!

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தடுப்பூசி முகாம்:

தமிழகத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 12ம் தேதி அன்று அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 20 லட்சம் தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்த அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதை விடவும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் இதேபோல், தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

கே.செல்லப்பனுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது – முக்கிய அறிவிப்பு

கடந்த வாரம் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 18 வயதிற்கு மேல் உள்ள தகுதியானவர்கள் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனால் இதே முறையில் தமிழகத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்த முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதிலும், கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

கடந்த வாரம் கடைப்பிடிக்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களுடன் செப்டம்பர் 19ம் தேதியான நாளையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு போலவே காலை 7 மணிக்குத் தொடங்கும் தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 17ம் தேதியான நேற்று நடக்க இருந்த தடுப்பூசி முகாம் போதிய தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!