தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 29 – சுகாதாரத்துறை அறிக்கை!

0
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 29 - சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 29 - சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 29 – சுகாதாரத்துறை அறிக்கை!

தமிழகத்தில் இன்றைய மாலை நிலவரப்படி 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்ட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு சமீப நாட்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு சமீப காலத்தில் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு அடுத்த மாதம் அக்டோபர் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்து கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 3.33 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக ‘சன்சத்’ டி.வி – பிரதமர் மோடி துவக்கி வைப்பு!

இன்றைய பாதிப்பு நிலவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் புதிதாக 1,658 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,38,668ஆக அதிகரித்துள்ளது. இன்று 29 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி மருத்துவமனைகளில் 16,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் 298 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று ஒரு நாளில் மட்டும் 1,50,226 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,86,786-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 226 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் 40,985 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24,146 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8,184 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here