செப்.26 தமிழகத்தில் 3 வது சிறப்பு தடுப்பூசி முகாம் – மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் வேண்டுகோள்!

0
செப்.26 தமிழகத்தில் 3 வது சிறப்பு தடுப்பூசி முகாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் வேண்டுகோள்!
செப்.26 தமிழகத்தில் 3 வது சிறப்பு தடுப்பூசி முகாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் வேண்டுகோள்!
செப்.26 தமிழகத்தில் 3 வது சிறப்பு தடுப்பூசி முகாம் – மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் வேண்டுகோள்!

தமிழகத்தில் வரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 26ம் தேதியான இன்று சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்:

தமிழகம் முழுவதும் தகுதியடைவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 3ம் கட்டமாக செப்டம்பர் 26ம் தேதியான இன்று தமிழகத்தின் 20,000 பகுதிகளில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த ரத்த தான சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, அதன்பின்னர் உரையாற்றினார்.

இந்தியா வளர்ந்தால் உலகமும் வளரும் – ஐ.நா கூட்டத்தில் பிரதமர் உரை!

அப்போது, தமிழக அரசின் மருத்துவ காப்பீடு குறித்த கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,700 ஆக அதிகரித்துள்ளது. இது மிகவும் கவனிக்க வேண்டிய நிலையாகும். மக்கள் அரசு அளித்துள்ள தளர்வுகளை முறையாக பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் 18 வயது மேற்பட்ட 56% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 17% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

சிறந்த coaching centre – Join Now

தகுதியுடைய 22லட்சம் பேர்கள் 2 தவணை தடுப்பூசி இன்னும் செலுத்திக் கொள்ள வில்லை. மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காததால் தான் பாதிப்பு அதிகரிக்கிறது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன் வந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய அளவில் தடுப்பூசி முகாமகள் நடத்தப்படுவதால், அங்கு பணியாற்றும் ஊழியா்களுக்கு ஓய்வு தரும் வகையில் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!