முடிவுக்கு வந்த விஜய் டிவியின் ‘செந்தூரப்பூவே’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

0
முடிவுக்கு வந்த விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
முடிவுக்கு வந்த விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
முடிவுக்கு வந்த விஜய் டிவியின் ‘செந்தூரப்பூவே’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘செந்தூரப்பூவே’ எனும் சூப்பர் ஹிட் சீரியல் சுமார் 349 எபிசோடுடன் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சீரியலின் கடைசி காட்சி நேற்று (ஏப்ரல்.13) ஒளிபரப்பாகி இருக்கிறது.

செந்தூரப்பூவே சீரியல்

டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாக பல புத்தம் புதிய சீரியல்களின் அணிவகுப்பு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கம் போல சில சீரியல்கள் TRP ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வர, ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் கவனம் ஈர்க்க தவறி விடுகிறது. இப்படி TRP ரேட்டிங்கில் சரியான முன்னேற்றத்தை காணாத சீரியல்கள் குறுகிய காலத்திற்குள் முடிவடைவது வழக்கம் தான். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘செந்தூரப்பூவே’ எனும் சீரியல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

வில்லன் ‘சிட்டி ரோபோ’ கெட்டப்பில் களம் இறங்கிய சிவாங்கி – குக் வித் கோமாளி ப்ரோமோ ரிலீஸ்!

இந்த ‘செந்தூரப்பூவே’ சீரியலில் பிரபல சினிமா நடிகர் ரஞ்சித், துரை எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஸ்ரீநிதி, ரோஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் துவங்கிய இந்த சீரியல் இப்போது 349 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் ‘செந்தூரப்பூவே’ சீரியலின் கடைசி எபிசோடில் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேர்ந்து, ரோஜாவை அவரது மாமியார் மருமகளாக ஏற்றுக்கொள்வது போல சில காட்சிகள் இடம்பிடித்திருந்தது.

இப்போது ‘செந்தூரப்பூவே’ சீரியலுக்கு பதிலாக விஜய் டிவியில் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலின் கதைக்களம் அக்கா, தங்கை பாசத்துடன் சற்று வித்தியாசமான வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தவிர விஜய் டிவியில் ‘செல்லம்மா’ என்ற புதிய சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், அதற்கு பதிலாக தற்போது ஒளிபரப்பாவதில் எந்த சீரியல் முடிவடைய இருக்கிறது என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!