இந்திய அணிக்கு சிக்கல் – அரையிறுதி போட்டியில் வெற்றி யாருக்கு?
இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரையிறுதி போட்டி:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவடைந்து இன்றிலிருந்து அரையிறுதி போட்டி துவங்குகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இந்நிலையில், 9 லீக் ஆட்டங்களிலும் தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அரையிறுதியிலும் வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியிலே இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மும்பையில் மோதிக்கொள்ள இருக்கிறது. முன்னதாக, முகமது சிராஜ்க்கு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்து அணியுடன் களமிறங்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, முகமது சிராஜ் களமிறங்கவில்லையெனில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே சறுக்கிவிடுமோ என ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளனர்.