தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவிகிதம் – இணையத்தில் வெளியீடு!

0
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவிகிதம் - இணையத்தில் வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவிகிதம் - இணையத்தில் வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவிகிதம் – இணையத்தில் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வு 4 கட்டமாக இன்று முதல் நடைபெற இருக்கும் நிலையில் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவிகிதம் தற்போது வெளியாகி இருக்கிறது.

செமஸ்டர் தேர்ச்சி சதவிகிதம்:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்று தேர்ச்சி முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் பலர் உயர்கல்வி பயில கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலமாக மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 20) முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட இருக்கிறது.

வழக்கம் போல இல்லாமல் இந்த ஆண்டு நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள 1.60 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக சிறப்பான கல்வியை வெளிப்படுத்தி வரும் கல்லூரி எது? எனவும் அந்த கல்லூரியின் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கும் எனவும் கடந்த ஆண்டு அந்த கல்லூரியின் கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு இருந்தது என்பது போன்ற விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றனர்.

GooglePay, PhonePay ஆகியவற்றிற்கு சேவை கட்டணம் வசூல்? ரிசர்வ் வங்கி திட்டம்!

Exams Daily Mobile App Download

இந்த விவரங்கள் www.tneaonline.org/ என்ற தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மே மற்றும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் மற்றும் கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!