அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான கால அட்டவணை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. அதனால் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருவதால் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டது. ஆண்டுதோறும் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில், ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.

ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு இன்னும் 9 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

ஆனால் கடந்த மாதங்களில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் வேகமெடுத்ததால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு போன்றவற்றால் தற்போது செமஸ்டர் தேர்வு தாமதமாக நடைபெற்றது. ஏற்கனவே ஜூன் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் அறிவியல், மேலாண்மை மற்றும் கட்டடக்கலை பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த அட்டவணையின் படி அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வு தொடங்கி, ஜூலை மாதம் முடிவடைய உள்ளது. மேலும் அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள அணைத்து தனியார் மற்றும் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு  ஜூன் இறுதி வாரம் தொடங்கி ஜூலை இறுதியில் முடிகிறது. மாணவர்கள் பாடவாரியான தேர்வு நாள் விபரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!