பொறியியல் கல்லூரிகளில் முழு செமஸ்டர் வகுப்புகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!

0
பொறியியல் கல்லூரிகளில் முழு செமஸ்டர் வகுப்புகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!
பொறியியல் கல்லூரிகளில் முழு செமஸ்டர் வகுப்புகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!

பொறியியல் கல்லூரிகளில் முழு செமஸ்டர் வகுப்புகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் !!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவறையின்றி மூடப்பட்டுள்ளது.

வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபடியாக இல்லாததினால் மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு நவம்பர் மாதம் வரை சாத்தியமற்றதாகவே இருக்கிறது. இதனால் நடக்க வேண்டிய தேர்வுகள் மற்றும் அடுத்து தொடங்கப்பட வேண்டிய கல்வியாண்டு வகுப்புகள் குறித்த மாற்று ஏற்பாடுகளை எல்லா கல்லூரிகளும் மேற்கொண்டு வருகின்றன.

10, 11 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி

வட இந்தியாவின் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் அடுத்து வரும் செமஸ்டர் வகுப்புகள் முழுவதையும் ஆன்லைனிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது தாக்கம் குறையும் வரை காத்திராமல் மாணவர்களுக்கு அடுத்து வரவிருக்கும் செமஸ்டர் வகுப்புகளை ஆன்லைன் மூலமாகவே நடத்திவிட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே பதிவு செய்த ரெகார்டர்கள் காணொலி காட்சி மூலம் வீடியோ வகுப்புகள்  என பல்வேறு முயற்சிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் தொற்று ஆரம்பித்த காலத்திலேயே இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் அடுத்து வரும் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!