“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா – ரசிகர்கள் உற்சாகம்!

0
"குக் வித் கோமாளி சீசன் 3" நிகழ்ச்சியில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா - ரசிகர்கள் உற்சாகம்!
“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீசனில் புதிய வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை ஷபானா வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 3:

தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நகைச்சுவை நிகழ்ச்சிகளும், சமையல் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. இந்த இரண்டுமே சேர்ந்து ஒரே கலவையாக தொடங்கப்பட்டது தான் விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் தங்களுடைய சமையல் திறமையை காட்ட அதை சொதப்பி வைப்பதற்காக நகைச்சுவை கோமாளிகள் வந்து இருக்கின்றனர். கோமாளிகளின் சொதப்பல்களை மீறி நன்றாக சமைப்பவர்களே டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார்கள்.

விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – மகாவின் முடிவு என்ன?

இந்நிலையில் இதுவரை 2 சீசன்களும் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் மூன்றாவது சீசன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் கடந்த சீசன்களில் கலந்து கொண்ட அதே நடுவர்களும், ஒரு சில புதிய கோமாளிகளும், சில பழைய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் புகழ் ஒரு சில எபிசோடுகளில் மட்டுமே வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த இரண்டு சீசன்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு நடந்த சோகம் – அவருடைய அம்மா சொன்ன தகவல்!

இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆன நிலையில் நிகழ்ச்சியில் புதிதாக வைல்ட் கார்ட் எண்ட்ரியாக முன்னணி சீரியல் நடிகை ஒருவர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சிக்கு ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா கலந்து கொள்ள இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அவர் நன்றாக சமைப்பார் என அவருடைய கணவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அவர் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!