ஆர்யனுடன் திருமண நாளை கொண்டாடும் ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
ஆர்யனுடன் திருமண நாளை கொண்டாடும் 'செம்பருத்தி' ஷபானா - வைரலாகும் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஆர்யனுடன் திருமண நாளை கொண்டாடும் 'செம்பருத்தி' ஷபானா - வைரலாகும் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஆர்யனுடன் திருமண நாளை கொண்டாடும் ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானா இருவரும் திருமணம் செய்துகொண்டு 2 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், இருவரும் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில் வெளியிட்ட புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமண கொண்டாட்டம்

தற்போது தமிழ் சின்னத்திரை உலகினரால் அதிகம் பேசப்பட்டு வந்த காதல் ஜோடிகளான விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யன் மற்றும் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா இருவரும் கடந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தனர். அதாவது, எதிர்பாராத விதமாக நடைபெற்ற இவர்களின் காதல் திருமணம் ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய வைத்திருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலமாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘கோலங்கள்’ தொல்காப்பியன் – ரசிகர்கள் உற்சாகம்!

இப்படி இருக்க நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானாவின் இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. அதாவது, வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களின் இந்த காதல் திருமணம் அவர்களது பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை என்றும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் சில தகவல்கள் காட்டுத்தீ போல பரவியது. ஆனால் இந்த வதந்திகள் குறித்து ஷபானா மற்றும் ஆர்யன் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

தனுஷின் வடசென்னை பட நடிகர் சூர்யகாந்த் கொரோனாவால் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!

ஆனால் நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானா இருவரும் திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது போல பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் முடிந்து 2 மாதங்கள் கடந்துள்ள நிலையில், திருமண நாளை கொண்டாடும் விதமாக நடிகர் ஆர்யன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘ஹேப்பியஸ்ட் 2வது மாதம் மை பொண்டாட்டி’ என்று பதிவிட, இந்த புகைப்படத்தை ரீ ஷேர் செய்த ஷபானா ‘லவ் யூ 3000’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது ரசிகர்களின் வரவேற்புகளை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here