‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஜோடி போடும் முதியவர் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
'செம்பருத்தி' ஷபானாவுடன் ஜோடி போடும் முதியவர் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
'செம்பருத்தி' ஷபானாவுடன் ஜோடி போடும் முதியவர் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஜோடி போடும் முதியவர் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் பார்வதியாக நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை ஷபானா தற்போது சீரியல் ஷூட்டிங்கில் தன்னுடன் நடித்து வரும் முதியவர் ஒருவருடன் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ஷபானா

தமிழ் சின்னத்திரை தொடர்களில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்க கூடிய முன்னணி சீரியல்களில் ஒன்று தான் ‘செம்பருத்தி’. ஜீ தமிழ் டிவியில் சுமார் 4 ஆண்டுகாலமாக 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டு வரும் இந்த ‘செம்பருத்தி’ சீரியல் ஆரம்பம் முதலே மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த சீரியல் இவ்வளவு பெரிய ரீச் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு சீரியலின் கதைக்களமும், அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் முக்கிய காரணம் ஆகும்.

“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் ‘செம்பருத்தி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஷபானா. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் அப்பாவியான இளம் பெண்ணாக, குடும்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் பெண்ணாக நடித்து வரும் நடிகை ஷபானா கேரளாவை சேர்ந்தவர். இருந்தாலும், இவர் தற்போது தமிழக மக்கள் மத்தியில் ஏகப்பட்ட ஆதரவுகளையும், அன்பையும் பெற்று வருகிறார். இதற்கிடையில் நடிகை ஷபானாவுக்கு, விஐய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யனுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் புகழ் என்ட்ரி எப்போது? வித்யூலேகா சொன்ன விளக்கம்!

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில் இந்த காதல் ஜோடியானது, மகிழ்ச்சியாக தங்களது மன வாழ்க்கையை நடத்தி வருகிறது. இந்நிலையில், செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் நடிகை ஷபானா, அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு முதியவருடன் சேர்ந்து பழைய திரைப்பட பாடல் ஒன்றுக்கு நடிகை ஷபானா செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here