
திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யனுக்கு சமைத்து கொடுத்த பிரியாணி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் ஷபானா இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், தனது காதல் கணவருக்கு முதன்முதலாக ஷபானா பிரியாணி சமைத்து கொடுத்திருக்கிறார்.
ஆர்யன் ஷபானா ஜோடி:
சின்னித்திரையில் ஒரே சீரியலில் நடித்து பின் காதலித்து திருமணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமியில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அது பற்றி ஷபானாவும் எங்க இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்டது என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாசமலராக கவனம் ஈர்க்கும் விஜே விஷால் & நேஹா – வைரலாகும் வீடியோ!
அதன் பின் இருவரும் சில நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்தின் படி கடத்த நவம்பர் 11 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்திற்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை அவர்களுக்கு வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Vijay TV Bigg Boss 5: சிபி, அபிஷேக் இடையே முற்றிய மோதல் – ஷாக்கான போட்டியாளர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
இருவரும் பாண்டிசேரிக்கு ஹனிமூன் சென்று அங்கே சில புகைப்படங்களை வெளியிட்டனர். அன்று ஆர்யனின் பிறந்தநாள் என்பதால் ஷபானா கொட்டும் மழையில் பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்நிலையில் திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் ஷபானா ஆர்யனுக்கு பிரியாணி சமைத்து கொடுத்திருக்கிறார். அதை ஆர்யன் என் பொண்டாடி சமைத்தது என பதிவிட்டு இருக்கிறார். அதில் பிரியாணி முட்டை சிக்கன் என எல்லாம் சமைத்து கொடுக்க, அதை பார்த்தால் எச்சில் ஊறுது என கேப்சன் பதிவிட்டு இருக்கிறார்.