தனது பெயரை மாற்றிய ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா – இவ்வளவு காதலா? வியக்கும் ரசிகர்கள்!
சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜீ தமிழின் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் தனது பெயரை இனி மிஸஸ் ஆர்யன் என அழைக்க வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரி பதிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஷபானா
தமிழ் சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானா ஷாஜகான் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நடிகை ஷபானா மற்றும் ஆர்யனின் திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்று முடிந்தது. கண் பட்டு விடும் அளவுக்கு இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
சிபி மீது இருந்த கோவத்தில் பொருட்களை உடைத்த அக்ஷரா – கலவரமாகும் பிக்பாஸ் வீடு!
அதுவும் ஆர்யன் மற்றும் ஷபானாவுக்கு திருமணமாகி 2 வாரங்கள் கடந்திருக்கும் நிலையிலும் இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இன்றும் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படி இருக்க திருமணத்துக்கு பின்பாக ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் தங்களது ஹனிமூன் ட்ரிப்பை கொண்டாடிவிட்டு, தங்களது வேலைகளை துவங்கி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை ஷபானா கலந்துகொண்ட ‘செம்பருத்தி’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இதை தொடர்ந்து நடிகை ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரி ஒன்று தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. அதாவது, நடிகை ஷபானா ஹோட்டல் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்வாரசியம் என்னவென்றால், அவரது கையில் இருக்கும் கப்பில் ஆர்யன் என பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இதனுடன் ‘Call me mrs.ARYAN’ என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார் ஷபானா.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!
இப்போது ஷபானா, தனது பெயரை இனி மிஸஸ் ஆர்யன் என அழைக்க வேண்டும் என விரும்புவதாக ரசிகர்கள் கணித்துள்ளனர். இப்படி இருக்க ஷபானா வெளியிட்ட இந்த ஸ்டோரியை தனது இன்ஸ்டா கணக்கின் ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்த நடிகர் ஆர்யன், ‘அட அட டா’ என ஒரு கேப்ஷனை கொடுத்துள்ளார். இந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது. என்றாலும் நடிகர் ஆர்யன் மீதான நடிகை ஷபானாவின் இந்த காதலை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.