ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் நடிகை ஷபானாவின் குடும்பம் – வைரலாகும் புகைப்படம்!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "செம்பருத்தி" சீரியல் நடிகை ஷபானாவின் குடும்பம் - வைரலாகும் புகைப்படம்!
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் நடிகை ஷபானாவின் குடும்பம் – வைரலாகும் புகைப்படம்!

ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் அறிமுகமாகி சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. அவர் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி ஷபானா:

தமிழ் சின்னத்திரை நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதில் பிரபலமான சீரியல் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு அன்பை அள்ளிக் கொடுப்பார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சீரியல் தான் செம்பருத்தி.இந்த சீரியலின் கதாநாயகியாக புது முக நடிகையாக ஷபானா அறிமுகமாகினார். அவர் நடிக்க தொடங்கியது முதல் சீரியல் நல்ல TRPயை பெற்றது. தற்போது 1500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷாவின் புதிய வீடியோ – குவியும் லைக்குகள்!

ஷபானா முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் முதலில் அவர் நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாம், ஆனால் நடிப்பு மீது இருந்த ஆசையால் அவர் செம்பருத்தி சீரியலில் பல எதிர்ப்புகளை மீறி நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் அவர்களுக்கு விவாகரத்து என சொல்லி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் கிளம்பியது

5 வருடத்திற்கு முன்னரே காதலில் விழுந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – அவரே அளித்த தகவல்!

இந்நிலையில் ஷாபனாவும் ஆர்யனும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவுகள் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. ஷபானா ஆர்யன் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றனர். ஷாபனாவிற்கு தந்தை இல்லை என்பதால் திருமணத்திற்கு முன் தனது அம்மா மற்றும் தம்பி உடன் அவர் எடுத்த பிறந்தநாள் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!