திருமணத்திற்கு பின் “செம்பருத்தி” ஷபானா கணவர் ஆர்யனுடன் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

0
திருமணத்திற்கு பின்
திருமணத்திற்கு பின் "செம்பருத்தி" ஷபானா கணவர் ஆர்யனுடன் வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்!
திருமணத்திற்கு பின் “செம்பருத்தி” ஷபானா கணவர் ஆர்யனுடன் வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலமான நடிகை ஷபானா தனது காதல் கணவர் விஜய் டிவி “பாக்கியலட்சுமி” ஆர்யனுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஷபானா ஆர்யன் ஜோடி:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷபானா. அவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த சீரியல் தான் தமிழ் சின்னத்திரையில் முதல் வாய்ப்பாக இருந்தாலும், அதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர் தனக்கொரு தனி இடம் பிடித்து இருக்கிறார். அந்த சீரியலில் முன்னணி நாயகி பிரியா ராமன் அவர்களுக்கு மருமகளாக நடித்து இருக்கிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

ஒரு காலத்தில் TRPயில் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல், கதாநாயகன் மாற்றம் காரணமாக TRPயில் மாற்றம் அடைந்தது. இருந்தாலும் ஜீ தமிழ் விருது வழங்கும் விழாவில் சிறந்த சின்னத்திரை நடிகை என்ற விருதை வாங்கி இருக்கிறார். ஷபானா விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் வேறு மதம் என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி சரவணணின் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக்கிங் ப்ரோமோ!

அதன் பின் பல இடங்களுக்கு தனது கணவருடன் சென்ற ஷபானா அது குறித்த புகைப்படங்களை ஷேர் செய்தார். ஆனால் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வைரலாக பரவியது. அது குறித்து இருவர் தரப்பிலும் விளக்கம் எதுவும் வழங்கவில்லை. ஆனாலும் இருவரும் தங்களது அன்பை பகிர்ந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இருவரும் சந்தோசமாக தான் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஷபானா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!