திருமணத்திற்கு பின் “செம்பருத்தி” சீரியல் ஷபானா வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

0
திருமணத்திற்கு பின்
திருமணத்திற்கு பின் "செம்பருத்தி" சீரியல் ஷபானா வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்!
திருமணத்திற்கு பின் “செம்பருத்தி” சீரியல் ஷபானா வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!

ஜீ தமிழில் 1500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் ஷபானா, ஆதித்யா மற்றும் கதிர் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகி இருக்கிறது.

செம்பருத்தி சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். காரணம் சீரியல்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அதை சாதகமாக பயன்படுத்தி சீரியலில் பல திருப்பங்களை கொண்டு வந்து விறு விறுப்பை அதிகரித்து இருக்கின்றனர். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி சீரியல் மக்கள் மனதில் இடம் பிடித்த முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்த ட்விஸ்ட்! கலாய்க்கும் ரசிகர்கள்!

இந்த சீரியலில் ஆதி பார்வதியை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த அகிலாண்டேஸ்வரி தற்போது, பார்வதி கழுத்தில் மீண்டும் ஆதியை தாலி கட்ட சொல்லி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அதனால் சீரியலில் மீண்டும் விறுவிறுப்பு கூடி இருக்கிறது. ஆனால் வனஜா இந்த விஷயத்தில் என்ன மாதிரி வில்லத்தனம் செய்வார் என ரசிகர்கள் வருகிற எபிசோடுகளை பார்க்க ஆர்வத்துடன் இருக்கின்றனர். செம்பருத்தி சீரியல் 1200 எபிசோடுகளை கடந்து வெற்றி சீரியலாக இருக்க முக்கிய காரணமாக அந்த சீரியலின் கதாநாயகி ஷபானா தான்.

வில்லி வெண்பாவுடன் மீண்டும் இணைந்த பாரதி அருண் – வைரல் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் ஷபானா அந்த சீரியல் ஹீரோ ஆதித்யா மற்றும் கதிர் உடன் நட்பாக பழகி வருகிறார். சமீபத்தில் ஷபானா ஆர்யன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூட இருவரும் கலந்து கொண்டனர். தனது சிறந்த நண்பர்கள் என ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆதித்யா மற்றும் கதிருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நண்பர்களாக பழகி வருவதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here