‘திருமணம் 2’ சீரியலில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா & கார்த்திக் ராஜ் ஜோடி? ரசிகர்கள் ஷாக்!

0
'திருமணம் 2' சீரியலில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா & கார்த்திக் ராஜ் ஜோடி? ரசிகர்கள் ஷாக்!
'திருமணம் 2' சீரியலில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா & கார்த்திக் ராஜ் ஜோடி? ரசிகர்கள் ஷாக்!
‘திருமணம் 2’ சீரியலில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா & கார்த்திக் ராஜ் ஜோடி? ரசிகர்கள் ஷாக்!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ‘திருமணம்’ சீரியலின் 2ம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இதன் லீட் ரோலில் நடிகர் கார்த்திக் ராஜ் மற்றும் நடிகை ஷபானா நடிக்க இருப்பதாகவும் ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமணம் சீரியல்

சமீப காலங்களாக புத்தம் புதிய சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் டிவி மற்ற டிவி சேனல் சீரியல்களுக்கு டப் கொடுக்க துவங்கியுள்ளது. டிவி சீரியல்கள் மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வைத்துள்ள விஜய், ஜீ தமிழ், சன் போன்ற சேனல்களுக்கு போட்டியாக கலர்ஸ் தமிழ் சேனல் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய சீரியல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற சீரியல்களை போல 3 வருடம் 4 வருடம் என இழுத்தடிக்காமல் குறுகிய காலத்திலேயே சூப்பரான ஹிட் சீரியல்களை கொடுத்திருக்கிறது இந்த கலர்ஸ் தமிழ்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து மருத்துவமனை சென்ற தாமரை & பிரியங்கா – வெளிப்படையாக சொன்ன வீடியோ!

இந்த வகையில் கலர்ஸ் தமிழில் சுமார் 500 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் மக்களிடம் இருந்து எக்கச்சக்கமான வரவேற்புகளை பெற்றிருந்தது. இத்தொடரில் சந்தோஷ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சித்து மற்றும் ஜனனி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா இருவரும் நடித்திருந்தனர். இவர்களின் இந்த ரீல் ஜோடிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானார்கள். இப்படி ‘திருமணம்’ சீரியலில் துவங்கிய சித்து மற்றும் ஸ்ரேயாவின் ரீல் காதல், ரியலாக மாறி தற்போது திருமண பந்தத்தில் முடிவு பெற்றிருக்கிறது.

‘யாரடி நீ மோகினி’ நட்சத்திரா களமிறங்கும் வள்ளி திருமணம் சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் மீண்டுமாக கலர்ஸ் தமிழ் டிவியில் ‘திருமணம்’ சீரியலின் 2 பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக ஷாக் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, திருமணம் சம்பந்தப்பட்ட கதைக்களத்துடன் துவங்கும் ‘திருமணம் 2’ சீரியலில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ், ஷபானா ஜோடி நடிக்க இருப்பதாக எடிட் ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இது நடக்க வாய்ப்பில்லை என்றாலும் இப்படி நடந்தால் அது வரவேற்கத்தக்கது என கார்த்திக் ராஜ், ஷபானா ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here