அரசின் திட்டத்தில் ‘இந்த’ பெண்கள் பயன் பெற முடியாது? காரணம் இது தான்!
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த விளக்கத்தை பதிவில் காண்போம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். உதாரணமாக மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் 1,80,000 முதலீடாகவும் வட்டி தொகை ரூ.3,29212 கிடைக்கும்.
புதிய மருத்துவ கட்டுப்பாடு விதிமுறை – மத்திய அரசு விளக்கம்!!
இந்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் பயன்பெறலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது மை என்ற இணையதளத்தின் தகவல்கள் படி NRI சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் வரவில்லை. இதற்கு என்ன சில நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மட்டுமே மக்கள் திட்டத்தில் சேர முடியும். நிபந்தனையின் படி 10 வயது நிரம்பிய பெண் குழந்தையின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க வேண்டும். அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுடைய பெற்றோர்கள் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.