‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ அருண் எடுத்த செல்பி – வைரல் பதிவு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை மற்றும் 'பாரதி கண்ணம்மா' அருண் எடுத்த செல்பி - வைரல் பதிவு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை மற்றும் 'பாரதி கண்ணம்மா' அருண் எடுத்த செல்பி - வைரல் பதிவு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ அருண் எடுத்த செல்பி – வைரல் பதிவு!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் பிறந்த நாள் தொடர்பான காட்சிகளும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது கடையின் திறப்பு விழா காட்சிகளும் பரபரப்பாக சென்று வருகிறது. தற்போது இந்த சீரியலின் பிரபலங்கள் இருவர் எடுத்துக் கொண்ட போட்டோ மிகவும் வைரலாகி உள்ளது.

வைரல் பதிவு:

விஜய் டிவியின் சீரியல்கள் அனைத்தும் முன்னணியில் இருந்து வரும் நிலையில் ஆரம்பித்தது முதல் தற்போது வரை அதிக ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துள்ள செல்பி தற்போது வைரல் ஆகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் அறிவுமணி என்கின்ற பாரதியின் தங்கை வேடத்தில் தான் காவ்யா அறிமுகம் ஆனார்.

விஜய் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லன் நடிகர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான முல்லை வேடத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பினால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி விட்டார். இரண்டு சீரியல்களை ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்துள்ள போதிலும், பல முறை இரண்டு சீரியல்களின் சங்கமமும் நடந்துள்ளது. இதேபோல், தான் பாரதி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு முக்கிய காட்சிகளில் நடிக்க உள்ளதாக ஒரு பக்கம் தகவல்கள் வந்துள்ளது.

விஜய் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லன் நடிகர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இன்னொரு புறம், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த போதில் இருந்து காவ்யாவும், அருணும் நல்ல நண்பர்கள் என்றும், அது போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சாதாரணமாக வந்த போது நட்பு ரீதியாக எடுக்கப்பட்ட போட்டோ தான் அது என்றும் சிலர் கூறி வருகின்றனர். பாரதி தனது தோழி காவ்யாவுடன் மட்டுமில்லாமல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லக்ஷ்மண பாண்டியன் என்ற வேடத்தில் நடிக்கும் தனத்தின் குழந்தையையும் தூக்கி வைத்து போட்டோ எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!