TNPSC குரூப் 2, 2A காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – தேதி மாற்றம்? முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் நடத்தப்படும் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி 23ம் தேதி அன்று வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தேர்வை நடத்துமாறு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரூப் 2,2A:
தமிழகத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், கூட்டுறவு சங்கங்க ஆய்வாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஸ்டெனோ-டைப்பிஸ்ட், நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, நன்னடத்தை அதிகாரி, தணிக்கை ஆய்வாளர், உதவி ஜெயிலர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு குரூப்2, 2A போன்ற போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தாக்கத்தால் நடைபெறவில்லை.
அடுத்த 2 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5831 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த குரூப் 2 தேர்வை விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30 திற்குள் இருக்க இருக்க வேண்டும் இது பொது பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. மேலும் TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (பிப்.22ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!
இந்த நிலையில் தேர்வு நடைபெறும் தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனெனில் மே 21 சனிக்கிழமை என்பதால் வேலைக்கு செல்லக்கூடிய தேர்வர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் அனைத்து தேர்வர்களும் தேர்வை எழுதும் படி ஞாயிற்றுக்கிழமை (மே 21) குரூப் 2,2A தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் 23ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் மாற்று தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.