வாகன நம்பர் பிளேட்களில் அளவு நிர்ணயம் – மீறினால் அபராதம்! முக்கிய அறிவிப்பு!

0
வாகன நம்பர் பிளேட்களில் அளவு நிர்ணயம் - மீறினால் அபராதம்! முக்கிய அறிவிப்பு!
வாகன நம்பர் பிளேட்களில் அளவு நிர்ணயம் - மீறினால் அபராதம்! முக்கிய அறிவிப்பு!
வாகன நம்பர் பிளேட்களில் அளவு நிர்ணயம் – மீறினால் அபராதம்! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நம்பர் பிளேட் வடிவமைப்பை தான் வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும். இந்த விதியை மீறினால், போக்குவரத்து சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

நம்பர் பிளேட்:

தமிழகத்தில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வண்ணங்களிலும் நம்பர் பிளேட்களை வடிவமைக்கின்றனர். விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. தங்களின் பெயர்கள், தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் பெயர்கள் வாசகங்கள் போன்றவைகளை நம்பர் பிளேட்டில் எழுதுகின்றனர். நம்பர் பிளேட்டுகளை மறைத்து பல டிசைன்களை வைப்பது ட்ரெண்டாகி வருகிறது. இதனால் குற்றச் சம்பவங்களின் போது பதிவெண்ணை ஆய்வு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – 3வது தவணை அவசியமா?

சமீப காலமாக வாகனங்களின் நம்பர் பிளேட் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இருப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட நம்பர் பிளேட் வடிவமைப்பை தான் வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களில் வெள்ளை நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் வாகன பதிவெண் எழுத வேண்டும். வணிக ரீதியிலான வாகனங்களில் மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் எழுத வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட் அளவு 200 X 100 மி.மீ., இலகுரக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் 340 X 200 மி.மீ., அல்லது 500 X 120 மி.மீ., வணிக ரீதியிலான நடுத்தர, கனரக வாகனங்கள் 340 X 200 மி.மீ., இருக்க வேண்டும். அதே போல இரண்டு சக்கர வாகனங்களின் பின்புறம் நம்பர் அளவு 35 மி.மீ. உயரம், 7 மி.மீ. தடிமன், 5 மி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். காரில் முன், பின்புறம் எழுத்து அளவு 40 மி.மீ. உயரம், 7 மி.மீ. தடிமன், 5 மி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். கனரக வாகனங்களில் முன், பின்னும் நம்பர், எழுத்துகள் 65 மி.மீ. உயரம், தலா 10 மி.மீ. தடிமன் இடைவெளி இருக்க வேண்டும். இந்த விதியை மீறினால், போக்குவரத்து சட்டப்பிரிவு 177ன் கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!