BCC ஆவண பட சர்ச்சை .. நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் – பல்கலைக்கு 144 தடை உத்தரவு!

0
BCC ஆவண பட சர்ச்சை .. நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் - பல்கலைக்கு 144 தடை உத்தரவு!
BCC ஆவண பட சர்ச்சை .. நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் - பல்கலைக்கு 144 தடை உத்தரவு!
BCC ஆவண பட சர்ச்சை .. நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் – பல்கலைக்கு 144 தடை உத்தரவு!

இந்திய பிரதமர் மோடி குறித்து பிபிசி ஊடகம் அண்மையில் வெளியிட்ட ஆவண படத்தை வெளியிட்டது. இதனை டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட திட்டமிட்டனர். இதனையடுத்து நடந்த கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

பிரபல செய்தி ஊடகமான பிபிசி கடந்த 17ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் அவர் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சர்ச்சைகள் உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு ஆவண படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனை மீறியும் சில சமூக ஊடகங்களில் ஆவணப்படம் பதிவிடப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களை தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவண படத்தை திரையிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்ததாக தகவல் வந்தது. இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை (ஜன. 28) பள்ளிகள் இயங்கும் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

இதனை மீறியும் அந்த ஆவண படத்தை செல்போனில் பார்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கலவரம் காரணமாக டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தடை உத்தரவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!