தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு!

தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு!

தமிழ்நாட்டில் 16.01.2021 மற்றும் 10.07.2021 க்கு இடையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இப்போது தடுப்பூசிகளின் 2 வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி :

தமிழகத்தில் நோய் தடுப்பு பணியின் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. 18 வயது மேற்பட்டோருக்கு கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசின் அனுமதி பெற்று 18 வயது முதல் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆப்கன் தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல் – இந்திய தூதரக தாக்கத்திற்கு பிரதமர் கடும் கண்டனம்!

தடுப்பூசியின் விளைவாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படுகிறது. மேலும் வீதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் கடைகள், உணவகங்கள் திறந்திருக்க அனுமதி – அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு 2 ம் டோஸ் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 16.01.2021 மற்றும் 10.07.2021 க்கு இடையில் 5,64,048 கோவாக்சின் மற்றும் 10,48,575 கோவிஷூல்டு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் இப்போது தடுப்பூசிகளின் 2வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!