பாரதியின் 2 கண்ணம்மாவும் இணைந்து சீசன் 2 – வெளியான ப்ரோமோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
பாரதியின் 2 கண்ணம்மாவும் இணைந்து சீசன் 2 - வெளியான ப்ரோமோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாரதியின் 2 கண்ணம்மாவும் இணைந்து சீசன் 2 - வெளியான ப்ரோமோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாரதியின் 2 கண்ணம்மாவும் இணைந்து சீசன் 2 – வெளியான ப்ரோமோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தற்போது அதிக பரபரப்பாக சென்று வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் புதிதாக ஒரு ப்ரோமோ வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது. இதில், உள்ள காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீசன் 2:

விஜய் டிவியின் ஆஸ்தான இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் தொடக்கம் முதல் தற்போது வரை கடந்த 3 வருடங்களாக சின்னத்திரையில் தொடர்ந்து நம்பர் 1 சீரியல் என்ற பட்டத்தை கொண்டிருக்கும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் அருண், ரோஷினி, ரூபஸ்ரீ, அகிலன், கண்மணி, குழந்தைகளாக லிசா மற்றும் ரக்ஷா ஆகியவர்கள் நடித்து வருகின்றனர். அதில், ரோஷினி கடந்த மாதம் சீரியலில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக வினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குழந்தையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே அதிக ட்ரோல்களை பெற்று வருகிறது. அதனால் கதை பற்றிய விவரம் தமிழக மக்கள் அனைவரிடமும் பிரபலம் தான். அதிலும் டாக்டர் பாரதி இந்த ஒரு காரணத்திற்காக தனது மனைவியை சந்தேகப்படுவது குறித்து அதிக கிண்டல்கள் எழும். எப்போ பாரதி நீங்க டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீங்க என்று அனைத்து சமூக வலைப்பக்கத்திலும் ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருவது வழக்கமான செயலாக்கி விட்டது. வலிமை அப்டேட்க்கு பிறகு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விஷயம் இது தான். அந்த அளவிற்கு இந்த சீரியல் மிகவும் முன்னணியில் இருந்து வருகிறது.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் கதிர் வாழ்வில் ஜெயித்த உண்மை கதை – ரசிகர்கள் பாராட்டு!

தற்போது பல யூடுயூப் சேனல்களிலும் புதிதாக ஒரு ப்ரோமோ பாரதி கண்ணம்மா தொடரை வைத்து வலம் வருகிறது. அதில், பாரதியுடன் இரண்டு கண்ணம்மாவும் சேர்ந்து இருப்பது போல் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர் விரைவில் தொடங்க இருப்பதாக அதில் காட்சிகள் வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாரதி கண்ணம்மா முதல் சீசனுக்கே இன்னும் விடை தெரியவில்லை. இதில் சீசன் 2ல் ரெண்டு கண்ணம்மாவா என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ப்ரோமோ வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here