CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு – கல்வி வாரியம் விளக்கம்!

0
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு - கல்வி வாரியம் விளக்கம்!
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு - கல்வி வாரியம் விளக்கம்!
CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு – கல்வி வாரியம் விளக்கம்!

மதிப்பீட்டு முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதை விரும்பாத மாணவர்களுக்கு மட்டும் தொற்று பரவல் முற்றிலும் முடிவடைந்த பிறகு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் எழுந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் அனைத்து மாநில அரசுகளும் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சியை அறிவித்து வருகினறன. மதிப்பீட்டு முறைகள் மூலம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதே போல் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அரசும் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தேர்வு கேள்விக் குறியாகி உள்ளது. தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நோய்த்தொற்று காலத்தில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானதாக இல்லை என்றும் கூறினார்.

SBI Nominee பதிவினை ஆன்லைனில் செய்யும் எளிய வழிமுறைகள்!!

சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
மதிப்பீட்டு முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதை விரும்பாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவல் முற்றிலும் முடிவடைந்த பிறகே அத்தகைய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!