‘கோழியில் இருந்து தான் முட்டை வந்தது’ – பல வருட புதிருக்கு கிடைத்த விடை! விஞ்ஞானிகளின் விளக்கம்!

0
'கோழியில் இருந்து தான் முட்டை வந்தது' - பல வருட புதிருக்கு கிடைத்த விடை! விஞ்ஞானிகளின் விளக்கம்!
'கோழியில் இருந்து தான் முட்டை வந்தது' - பல வருட புதிருக்கு கிடைத்த விடை! விஞ்ஞானிகளின் விளக்கம்!
‘கோழியில் இருந்து தான் முட்டை வந்தது’ – பல வருட புதிருக்கு கிடைத்த விடை! விஞ்ஞானிகளின் விளக்கம்!

நாம் நமது சிறு வயது முதல் விளையாட்டாக கேட்டு வந்த கேள்வியான ‘கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா?’ என்ற கேள்விக்கு விஞ்ஞானி அறிவியல்பூர்வமான உண்மை பதிலை வெளியிட்டுள்ளனர். இது பற்றி இந்த பதிவில் காண்போம்.

விஞ்ஞானிகள் விளக்கம்:

உலகில் தீர்க்க முடியாத பல கேள்விகள், அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்ட தற்போதைய காலத்திலும் இருந்து வருகிறது. இந்த வாக்கியம் நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும், அதுதான் உண்மை. இது போல், தீர்க்க முடியாத புதிராக இருந்து வருவது ‘கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா?’ என்ற கேள்வியும் ஒன்று. இத கேள்வியை நாம் நமது சிறு வயதில் பல முறை விளையாட்டாக கேட்டு அனைவரையும் குழப்பி வருவது தான். நாம் விளையாட்டாக கேட்டாலும் அதில் இருக்கும் உண்மையை மட்டும் யாராலும் அடித்து கூற முடியாது.

தமிழக அரசு சார்பில் ரூ.25,000 & ‘கோட்டை அமீர்’ மத நல்லிணக்க பதக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அந்த அளவிற்கு சிரமமான கேள்வியாக இருந்து வருகிறது,’கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா?’ என்ற கேள்வி. இதற்கு தற்போது விஞ்ஞானிகள் அறிவியல்பூர்வமான பதிலை அளித்துள்ளனர். இந்த பதில் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருப்பது மட்டும் உறுதி. அதன்படி, கோழிக்குஞ்சு தான் முதலில் வந்தது என்று கூறியுள்ளனர். ஒரு முட்டை உருவாவதற்கு தேவையான OV-17 புரதச்சத்து கோழிக்குஞ்சின் ஓவரியில் தான் இருக்கிறது. இதனால் தான் கோழிக்குஞ்சில் இருக்கும் புரதத்தால் தான் கோழியில் இருந்து முட்டை வந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.21ம் தேதி மெகா முகாம்!

உயிரினங்களில் மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வு காரணமாக ஒரு புதிய உயிரினம் உருவாகிறது. முதலில், கோழி முட்டையின் கருவுக்குள் இருக்கும் செல்களில் இவ்வகையான மரபணு திரிபு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிக்குஞ்சு போன்று இருக்கும் உயிரினத்தின் மரபணு திரிபு ஏற்பட்டு தற்போதுள்ள கோழிக்குஞ்சின் DNA கூறுகளுடன் பிறந்துள்ளது. மேலும், திரிந்த மரபணுவுடன் உருவான முட்டையில் வெளிவந்த வந்தது தான் மரபணு மாறிய முதல் கோழிக்குஞ்சு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு முட்டையில் ஏற்படும் மரபணு மாற்றம் ஏற்பட்டால் எல்லா முட்டைகளுக்கும் பொருந்தாது. மரபணு மாற்றத்துடன் பிறந்த கோழிக்குஞ்சு தான் தற்போது நாம் பயன்படுத்தக்கூடிய கோழி மற்றும் முட்டையாக காணப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!