அறிவியல் தொழில்நுட்பம் – நவம்பர் 2018

0
அறிவியல் தொழில்நுட்பம் – நவம்பர் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018

இங்கு நவம்பர் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

அறிவியல்

மாசுபாடு தொடர்பான அறிக்கை அளிக்க சிறப்பு நடவடிக்கை குழு

 • டெல்லி-என்.சி.ஆர்.ல் மாசுபாடு தொடர்பான சம்பவங்கள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்க 52 சிறப்பு நடவடிக்கை குழுக்களை அமைத்தது.

ஓசோன் படலம் இறுதியில் சேதத்திலிருந்து மீண்டு வருகிறது

 • ஒரு ஐக்கிய நாடுகள், [ஐ.நா.] அறிக்கை பூமியின் பாதுகாப்பு ஓசோன் படலம் இறுதியில் ஏரோசோல் ஸ்ப்ரே மற்றும் குளிரூட்டிகள் ஆகியவையால் ஏற்படும் சேதத்தில் இருந்து மீண்டு வருவதாகத் தகவல்.

கஜா புயல்

 • இந்திய கடலோர காவல்படை (ICG) நவம்பர் 09, 2018 முதல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக கடலில் மீனவர்கள் உயிரிழப்பதை தடுப்பதற்கு முன்கூட்டிய எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது அரசு.

சூறாவளி புயல் ‘கஜா‘ குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

 • தமிழ்நாட்டின் உட்புறத்திலுள்ள ‘கஜா’ புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
 • வங்காள விரிகுடாவில் உருவான கடுமையான சூறாவளி புயல் ‘கஜா’ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையின் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. புயலுக்கு “கஜா” எனும் பெயரை இலங்கை அளித்தது.

விலங்கு உயிரணுக்களிலிருந்து வளர்க்கப்பட்ட உணவுப்பொருட்களை ஒழுங்கு படுத்துதல்

 • அமெரிக்காவில் “ஆய்வக இறைச்சி” என்று அழைக்கப்படும் விலங்கு உயிரணுக்களிலிருந்து வளர்க்கப்படும் உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்தி அதை உண்பதற்கான வழியை ஏற்படடுத்த ஒப்புக் கொண்டது.

காங்கோவின் எபோலா வெடிப்பு

 • உலக சுகாதார அமைப்பு, WHO காங்கோவின் கொடிய எபோலா வெடிப்பு இப்போது வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரியது எனக்கூறியுள்ளது, இது சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற பேரழிவிற்கு அடுத்த இடத்தைப்பிடித்துள்ளது. 

அறிவியல் கண்டுபிடிப்புகள்

நாவல் ‘பயோனிக் காளான்கள்’ மூலம் மின்சாரம் உற்பத்தி

 • இந்திய வம்சாவழியினர் உட்பட விஞ்ஞானிகள், ஒரு சாதாரண வெள்ளை பட்டன் காளானில் சயனோபாக்டீரியாவின் 3D-அச்சிடும் கொத்தால் பச்சை சக்தியை பயோனிக் கருவி மூலம் உருவாக்கினர்.

சீனா செயற்கை நுண்ணறிவு செய்தி அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது

 • க்சின்ஹுவா [Xinhua] செய்தி நிறுவனம் “உலகின் முதல்”, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு ஜோடி செய்தி அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது.

44 புதிய நிலக்கரி தொகுதிகள் நான்கு கிழக்கு மாநிலங்களில்கண்டுபிடிக்கப்பட்டது

 • கிழக்கு இந்தியாவின் நான்கு மாநிலங்களில் 44 புதிய நிலக்கரித் தொகுதிகளை கண்டுபிடித்துள்ளதாக இந்தியாவின் புவியியல் ஆய்வு (GSI) தெரிவித்துள்ளது.

கிரீன்லாண்ட் பனிப்பாறைக்கு கீழே ஐஸ் ஏஜ் கிரேட்டர்கண்டுபிடிக்கப்பட்டது

 • வடக்கு கிரீன்லாந்தில் பனி மற்றும் பனியால் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் புதைப்பட்ட, பாரிசை விட மிகப்பெரிய ஒரு துணைக்கோள் தாக்கத்தினால் ஏற்பட்ட பள்ளத்தை [கிரேட்டர்], விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 • பூமியின் கான்டினென்டல் பனிக்கட்டிகளில் ஒன்றின் கீழ் இவ்வளவு பெரிய அளவிற்கு ஒரு பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையாகும் என டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மழை தாக்கம் மற்றும் இயற்கை பேரழிவுகளை கண்காணிக்க புதியதொழில் நுட்பம்

 • மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரிப்பதை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்திய வானிலை துறை (IMD) உருவாக்கியுள்ளது.
 • முன் நிகழும் சூழ்நிலையைக் காட்டும் ‘தாக்கம் அடிப்படையிலான முன்அறிவிப்பு அணுகுமுறை’ என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம், மாநில அரசாங்கங்களை மழை தாக்கத்தை கண்காணிக்கவும் மற்றும் நிகழ்நேர முடிவுகளை எடுக்கவும் உதவும்.

பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க மொபைல் போன் சார்ந்தசென்சார்ஸ்

 • பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க ஐஐடி- ஹைதராபாத்[ஐஐடி-] ஆய்வாளர்களால் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் உருவாக்கப்பட்டது.

மோப்ப நாய்களுக்கு பதிலாக ‘ரோபோ–மூக்கு‘

 • விஞ்ஞானிகள் ஒரு செயற்கை “ரோபோ மூக்கு” கருவியை உருவாக்கியுள்ளனர், இது போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளை கண்டறிவதற்கு நாய்களுக்குப் பதிலாக வாழும் எலி செல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ‘ரோபோ-மூக்கை’ பயன்படுத்தத் திட்டம்.

விண்வெளி அறிவியல்

நாசாவின் ஹப்பிள் காஸ்மிக் புன்னகை முகத்தை ஒத்திருக்கும் [ஸ்மைலி] புள்ளியை கண்டறிந்தது

 • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி வானில் ஒரு புன்னகை முகத்தை ஒத்திருக்கும் [ஸ்மைலி] விண்மீன் குழுக்களை கண்டறிந்தது.

சீனா புதிய உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியது

 • சீனா வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரான பெய்டௌ [BeiDou] உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பான உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியது. பூமியின் மேலே 36,000 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட முதல் பெய்டௌ [BeiDou] -3 செயற்கைக்கோள் இதுவேயாகும்.
 • இது அமெரிக்க ஜி.பி.எஸ் அமைப்பு, ரஷ்யாவின் GLONASS மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கலீலியோ ஆகியவற்றிற்குபின் வரும் நான்காவது உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பு ஆகும்.

வியாழனின் ட்ரோஜன் விண்கற்களைப் பார்வையிடுவதற்காக NASA ஆய்வு செய்யத்திட்டம்

 • நாசாவின் ரால்ப் – ப்ளூட்டோ வரை பயணம் மேற்கொண்ட ஒரு விண்வெளிக் கருவி – சூரிய மண்டலத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து எஞ்சியிருக்கும் வியாழனின் ட்ரோஜன் விண்கற்களை ஆராய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், ரால்ப், லூசி மிஷனுடன் இணைந்து வியாழனின் ட்ரோஜன் விண்கற்களுக்கு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

வியாழனின் சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது

 • நாசாவின் ஜுனோ விண்கலம் வியாழன், வாயு கிரகத்தின் மாபெரும் பல வண்ணமயமான, சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது. அக்டோபர் 29-ம் தேதி ஜூனோ தனது 16வது வியாழன் கிரகத்தின் நெருங்கிய பயணத்தை நிகழ்த்திய பொழுது இந்த படம் எடுக்கப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்

 • நவீன தகவல் தொடர்புக்கான ஜிசாட் -29 செயற்கைக் கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக் கோளை, ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் எடுத்துச் செல்கிறது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்த உள்ளது.

ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

 • ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சூரியன் அருகே பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு

 • அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
 • அப்போது அந்த நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது பூமியை விட2 மடங்கு எடை கொண்டது. இது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கிறது.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-43 கவுண்டவுன் தொடங்கியது

 • 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது.
 • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் “ஹைசிஸ்” (ஹைபர் ஸ்பெக்ரல் இமேஜிங் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைகோளை இது சுமந்து செல்லும்.

பிஎஸ்எல்வி-சி43 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது  

 • இந்தியாவின் நவீன புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் ஹைசிஸ் மற்றும் 30 வெளிநாட்டு இணை செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி43 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 • அதிக எடை கொண்ட ஜி.சாட்-11 செயற்கைக் கோளினை டிசம்பர் 5-அன்று இஸ்ரோ செலுத்துகிறது.

ஜிசேட்-29 வெற்றிகரமாக அதன் நோக்க சுற்றுப்பாதையில்நிலைநிறுத்தப்பட்டது

 • இந்தியாவின் சமீபத்திய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசேட்-29 அதன் மூன்றாவது சுற்றுப்பாதை நடவடிக்கைகளின் போது அதன் நோக்க சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

செயலி, வலைப்பக்கம்

ஏரோ இந்தியா 2019

 • ‘ஏரோ இந்தியா 2019’ இன் 12 வது பதிப்பு 20 முதல் 24 பிப்ரவரி 2019 வரை பெங்களூருவில் உள்ள எலஹன்கா விமான தளத்தில் நடைபெறும்.
 • இந்த ஐந்து நாள் நிகழ்வு பொது விமான நிகழ்ச்சிகளுடன் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களின் ஒரு பெரிய வர்த்தக கண்காட்சியை இணைக்கும்.

“ஷி–பாக்ஸ்”[SHe- Box]

 • பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார் அளிக்கும் இணையதள போர்டலான “ஷி பாக்ஸ்”-ஐ, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாவட்டங்களுடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைத்துள்ளது.
 • “ஷி-பாக்ஸில்” பெறப்படும் புகார்களை புகார்தாரர்களும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் நேரடியாக கண்காணிக்க முடியும்.

பைசா – இணையப்பக்கம்

 • தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) கீழ் பயனாளிகளுக்கு வங்கிக்கடன்கள் மீதான வட்டித்தொகை பற்றிய விவரங்களை மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு முறையில் தெரிந்துகொள்வதற்காக பைசா  எனப்படும் கடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்துகொள்ளும் இணையப்பக்கம் புதுதில்லியில் தொடங்கிவைக்கப்பட்டது.
 • இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வங்கியான அலகாபாத் வங்கி இந்த இணையப்பக்கத்தை வடிவமைத்து உருவாக்கி உள்ளது.

முன்பதிவில்லா இரயில் பயணச்சீட்டு வசதி [UTS] கொண்ட மொபைல் செயலி

 • ரயில் பயணிகள் தற்போது நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவில்லா பொது டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை பெற பயணிகள் UTS செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

இ–பசு ஹாட் (ஜிபிஎம்எஸ் போக்குவரத்து)

 • விவசாயிகள் மற்றும் இத்துறை தொழில் முனைவோரை பால் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு ஆன்லைன் இணைய தளத்தை தொடங்கியுள்ளது.
 • இ-பசு ஹாட் என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் வேளாண் பொருள்களை வாங்க, விற்க முடியும்.
 • உயர் ரக கால்நடைகளின் சினை முட்டைகள் கிடைப்பது உள்ளிட்ட தகவலும் இந்த ஆன்லைன் இணையதளம் மூலம் பெறலாம்
 • UMANG (புதிய கால ஆளுமைக்கான ஐக்கியப்பட்ட மொபைல் செயலி) உடன் இது உருவாக்கப்பட்டு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்டது.
 • உள்நாட்டு இனங்களின் மரபணு தேர்வு மற்றும் 6000 பால் விலங்குகளை மரபணு ரீதியாக மதிப்பீடு செய்வதற்காக இண்டஸ்சிப்[INDUSCHIP] உருவாக்கப்பட்டது.

ஏர்சேவா [AirSewa] 2.0

 • மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் மாநில சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ​​ஆகியோர் புது டெல்லியில் மேம்படுத்தப்பட்ட ஏர்செவா0 வலைப் பக்கத்தையும் மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தினர்.

 “ஷி–பாக்ஸ்”[SHe- Box]

 • பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார் அளிக்கும் இணையதள போர்டலான “ஷி பாக்ஸ்”-ஐ, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாவட்டங்களுடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைத்துள்ளது.
 • “ஷி-பாக்ஸில்” பெறப்படும் புகார்களை புகார்தாரர்களும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் நேரடியாக கண்காணிக்க முடியும்.

பைசா  இணையப்பக்கம்

 • தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) கீழ் பயனாளிகளுக்கு வங்கிக்கடன்கள் மீதான வட்டித்தொகை பற்றிய விவரங்களை மத்தியப்படுத்தப்பட்ட மின்னணு முறையில் தெரிந்துகொள்வதற்காக பைசா எனப்படும் கடன் மற்றும் வட்டித் தொகையை எளிதாக அறிந்துகொள்ளும் இணையப்பக்கம் புதுதில்லியில் தொடங்கிவைக்கப்பட்டது.
 • இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வங்கியான அலகாபாத் வங்கி இந்த இணையப்பக்கத்தை வடிவமைத்து உருவாக்கி உள்ளது.

ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP)

 • ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP) ஏழு மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (ஐ.எஸ்.எஸ்.பி.) பிரிவில் மத்திய சுகாதாரசெயலாளர் பிரீத்தி சுதனால் துவக்கி வைக்கப்பட்டது.
 • நோயுற்ற தன்மையை கண்டறிதல், நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்கும், மக்களிடையே உள்ள நோய்களின் சுமையை குறைப்பதற்கும், ஆரோக்கியமான சுகாதார அமைப்புகள் மேம்படவும் இந்தத் தளம் உதவும்.

இ–பசு ஹாட் (ஜிபிஎம்எஸ் போக்குவரத்து)

 • விவசாயிகள் மற்றும் இத்துறை தொழில் முனைவோரை பால் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு ஆன்லைன் இணைய தளத்தை தொடங்கியுள்ளது.
 • இ-பசு ஹாட் என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் வேளாண் பொருள்களை வாங்க, விற்க முடியும்.
 • உயர் ரக கால்நடைகளின் சினை முட்டைகள் கிடைப்பது உள்ளிட்ட தகவலும் இந்த ஆன்லைன் இணையதளம் மூலம் பெறலாம்
 • UMANG (புதிய கால ஆளுமைக்கான ஐக்கியப்பட்ட மொபைல் செயலி) உடன் இது உருவாக்கப்பட்டு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்டது.
 • உள்நாட்டு இனங்களின் மரபணு தேர்வு மற்றும் 6000 பால் விலங்குகளை மரபணு ரீதியாக மதிப்பீடு செய்வதற்காக இண்டஸ்சிப்[INDUSCHIP] உருவாக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP)

 • ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP) ஏழு மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (ஐ.எஸ்.எஸ்.பி.) பிரிவில் மத்திய சுகாதாரசெயலாளர் பிரீத்தி சுதனால் துவக்கி வைக்கப்பட்டது.
 • நோயுற்ற தன்மையை கண்டறிதல், நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்கும், மக்களிடையே உள்ள நோய்களின் சுமையை குறைப்பதற்கும், ஆரோக்கியமான சுகாதார அமைப்புகள் மேம்படவும் இந்தத் தளம் உதவும்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here