அறிவியல் தொழில்நுட்பம் – அக்டோபர் 2018

0

அறிவியல் தொழில்நுட்பம் – அக்டோபர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018

இங்கு அக்டோபர்  மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

அறிவியல்

உமிழ்வு சோதனை வசதி

 • CSIR-NEERIல் ஒரு உமிழ்வு சோதனை வசதி நிறுவப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறினார், இதன் மூலம் வழக்கமான மற்றும் பசுமை பட்டாசுகளின் உமிழ்வு மற்றும் ஒலியை கண்காணிக்க விரிவான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

SWAS, SAFAL மற்றும் STAR

 • CSIR விஞ்ஞானிகள் குறைவாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பட்டாசுக்களை உருவாக்கியுள்ளனர், அவை சுற்றுப்புற சூழலுக்கு நட்பாக மட்டுமல்லாமல், வழக்கமான பட்டாசுக்களைவிட 15-20% மலிவானவை ஆகும்.
 • பாதுகாப்பான நீர் வெளியீட்டாளர் (SWAS), பாதுகாப்பான குறைந்த அலுமினியம் (SAFAL) மற்றும் பாதுகாப்பான தெர்மாய்ட் பட்டாசு (STAR) என்று இந்த பட்டாசுகள் பெயரிடப்பட்டுள்ளன.

அறிவியல் கண்டுபிடிப்புகள்

நீரை மாசுபடுத்துபவைகளை பிடிக்க சிறிய கோளங்கள் கண்டுபிடிப்பு

 • விஞ்ஞானிகள் பிஸ்ஃபெனால் ஏ (பிபிஏ)ஐ பிடித்து அழிக்கக்கூடிய சிறிய கோளங்களை உருவாக்கியிருக்கிறார்கள், இது பெரும்பாலும் நீரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்குகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை வேதியியல்.

ஐ.ஐ.டி கவுஹாத்தி குருத்தெலும்பு பழுதுபார்க்க உயர்ந்த சாரக்கட்டைஉருவாக்குகிறது

 • கவுஹாத்தி, இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐ.ஐ.டி) ஆராய்ச்சியாளர்கள் குருத்தெலும்பு பழுதுபார்த்தலில் உள்ள பற்றாக்குறையை விவரித்துள்ளனர். இந்த பற்றாக்குறையை துல்லியமாகவும், கட்டுப்பாடாகவும் குருத்தெலும்பு பழுதுபார்க்க உயர்ந்த சாரக்கட்டை உருவாக்கி உள்ளனர் .

நோய்களைக் கண்டறிய செல்-அளவிலான ரோபோக்கள் கண்டுபிடிப்பு

 • MIT விஞ்ஞானிகள் ஒரு எண்ணெய் அல்லது எரிவாயு குழாய்க்குள் உள்ள நிலைமைகளை கண்காணிக்கவும் அல்லது இரத்த ஓட்டத்தில் மிதந்து சென்று நோயைக் கண்டறியவும் பயன்படுத்தக்கூடிய ஒரு செல் அளவிலான ரோபோக்கள் கண்டுபிடிப்பு.

உலகின் மிகச்சிறிய ஆப்டிகல் கைரோஸ்கோப் உருவாக்கப்பட்டது

 • உலகின் மிகச்சிறிய ஆப்டிகல் கைரோஸ்கோப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் – வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு 3D இடங்களில் அவற்றின் நோக்குநிலைக்கு இது உதவுகிறது.

தண்ணீரில் இருந்து எண்ணெயை நீக்க அலோ வேரா

 • ஐ.ஐ.டி கவுகாத்தி ஆய்வாளர்கள் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய நுண்ணிய எண்ணெய்-விரும்பி பொருட்களை (oleophilic) அலோ வேரா ஜெல் பயன்படுத்தி எண்ணெய் விலக்கிகளாக மாற்றியுள்ளனர்.

இந்தோனேசியாவில் புதிய இலைப் பறவை இனம் கண்டுபிடிக்கப்பட்டது

 • இந்தோனேசியாவின் ரோட் எனும் உலர்ந்த இந்தோனேசிய தீவில் மட்டுமே காணக்கூடிய ஃபைலோஸ்கோபஸ் ரோடியென்ஸிஸ் எனப்படும் புதிய இலைப் பறவை இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு புதிய கெக்கோ பல்லி இனங்கள்

 • இந்தியாவின் ஊர்வன விலங்கினங்களில் சமீபத்திய சேர்க்கைகளாக மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளான அகஸ்தியமலை மற்றும் ஆனைமலை மலைத்தொடர்களில் மட்டுமே காணப்படும் ஸ்பாட்-கழுத்து டே கெக்கோ பல்லிகள் மற்றும் ஆனைமுடி கெக்கோ பல்லி சேர்க்கப்பட்டுள்ளது.

விண்வெளி அறிவியல்

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே முதல் நிலவு கண்டுபிடிக்கப்பட்டது

 • வானியலாளர்கள் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் முதல் சந்திரனை கண்டறிந்துள்ளனர். இது நெப்டியூனின் அளவு ஒரு பெரிய வாயு உலகம் போல் வேறு எந்த நிலவைப் போலில்லாமல், வியாழனைவிட மிக பெரிய ஒரு வாயு கிரகத்தை சுற்றி வருகின்றது.

சிறுகோள் மீது புதிய ரோபோவை ஜப்பான் தரையிறக்கியது

 • சூரிய மண்டலத்தின் தோற்றத்தை கண்டறிய ஜப்பானின் ஹயாபுசா 2, பிரெஞ்சு-ஜேர்மன் மொபைல் சிறுகோள் மேற்பரப்பு ஸ்கௌட், அல்லது மாஸ்காட்[MASCOT] ஏவப்பட்டு ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியால் (JAXA), ரியூகு சிறுகோள் மீது ரோபோவை தரையிறக்கியது.

ஒரு விண்கலத்தால் செல்லக்கூடிய மிக தொலைதூரப் பயணத்திற்கு நாசா ப்ரோப் திட்டம்

 • நாசாவின் நியூ ஹரிஸன்ஸ் ப்ரோப், இந்த புத்தாண்டில் பூமியில் இருந்து 6.6 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்டிமா துலே என்றழைக்கப்படும் குய்பர் பெல்ட் பொருளுக்கு அருகில் பறக்கவிருக்கிறது. ஒரு விண்கலம் விஜயம் செய்த மிக தொலைதூரப் பொருளுக்கான சாதனையை இந்த நிகழ்வு அமைக்கும்.

இளம் நட்சத்திரங்களிடமிருந்து வரும் சூப்பர்ஃபிளேர்கள்கிரகங்களுக்கு அபாயகரமானதாக மாற வாய்ப்பு: நாசா

 • நட்சத்திர மண்டலத்திலிருந்து வரும் பயங்கர ஃபிளேர்கள், அதனைச் சுற்றும் கிரகத்தின் வளிமண்டலத்தை பாதித்து வசிக்க முடியாதபடி செய்ய வாய்ப்பு உள்ளது என நாசாவின் ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 • HAZMAT – வாழத்தகுந்த மண்டலங்கள் மற்றும் M ட்வார்ப் [குள்ள நட்சத்திரம்] செயல்பாடு எனும் பெரிய திட்டத்தின் இத்தகைய நட்சத்திரங்களை ஹப்புள் தொலை நோக்கி மூலம் கவனித்து வருகிறார்.

வீனஸ் பயணங்களை முடித்த முதல் விண்கலம்: பார்சர் சோலார் ப்ராப் 

 • நாசாவின் பார்கர் சூரிய ஆய்வு – மனிதனின் முதல் சூரியனைத் தொடும் முயற்சி, இது சுமார் 2,415 கிலோமீட்டர் தொலைவில் வீனஸ் பயணத்தை பூமியின் ஈர்ப்பு விசையின் உதவிக்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தது.

ஐரோப்பா, ஜப்பான் புதன் கிரகத்திற்கு 7 வருட பயணத்தில் விண்கலத்தை அனுப்பியுள்ளது

 • ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்கள் அரியானே 5 ராக்கெட் மூலம் ஆளில்லா பெபி கொலம்போ விண்கலத்தை வெற்றிகரமாக புதன் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

காமா-கதிர் நட்சத்திரத்திற்கு நாசா காட்ஸில்லா, ஹல்க் என பெயரிட்டது

 • நாசா விஞ்ஞானிகள் 21 நவீன காமா கதிர் நட்சத்திரத்திற்கு ஹல்க் மற்றும் காட்ஸில்லா போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

செயலி, வலைப்பக்கம்

“டிஜி யாத்ரா“

 • டிஜி யாத்ரா என அழைக்கப்படும் விமான நிலையங்களில் பயணிகள் பயோமெட்ரிக் சார்ந்த டிஜிட்டல் செயலாக்கம் குறித்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கொள்கையை வெளியிட்டுள்ளது.

‘சிவிஜில்‘[‘CVigil’]

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோரால் தவறு செய்ததற்கான சான்றை பகிர்ந்து கொள்ள குடிமக்களுக்கான “சிவிஜில்” மொபைல் செயலியை விரைவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பயன்படுத்த திட்டம்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here