செப் 1 ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது – கல்வி அமைச்சர்!

0
செப் 1 ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது - கல்வி அமைச்சர்!
செப் 1 ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது - கல்வி அமைச்சர்!
செப் 1 ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது – கல்வி அமைச்சர்!

மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்திருந்த படி செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்:

கொரோனா பரவல் காரணமாக மத்திய பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக ஜூலை 26 முதல் மீண்டுமாக திறக்கப்பட்டது. இந்த நேரடி வகுப்புகள் 50% திறனுடன் இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளை திறப்பது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.

நாடு முழுவதும் செப். 6 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – அதிபர் அறிவிப்பு!

ஆனால் இந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக மாநில கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மார் தற்போது தெரிவித்துள்ளார். முன்னதாக மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசித்த அவர் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது படிப்படியாக பள்ளிகளை திறந்து, மாணவர்களை அனுமதிக்க ஆலோசித்துள்ள அரசு முதல் கட்டமாக 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

பின்னர், 1 முதல் 5 வரை வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வகுப்புகள் மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை துவங்குவதற்கான திட்டத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் ஒப்படைத்த பின்னர், அதற்கான ஒப்புதலைப் பெறுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே மத்திய பிரதேசத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) ஒரு நாளில் 6 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!