பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு? முதல்வர் விளக்கம்!

0
பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு? முதல்வர் விளக்கம்!
பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு? முதல்வர் விளக்கம்!
பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு? முதல்வர் விளக்கம்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் தினசரி படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா? என்கிற கேள்விக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூலை 1 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் இப்போது பிற மாநிலங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் பள்ளிகள் பிற்பகுதியில் திறக்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார். ஜூலை 1 முதல் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது. ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படும் முறை தொடரும். பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

ரேஷன் கார்டின் முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் பத்தாம் வகுப்பில் பல்வேறு பாடங்களில் பெறப்பட்ட சிறந்த ஐந்து மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், தங்களது மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் கொரோனா பரவலுக்கு பின்னர் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். அமைச்சர்கள் அளித்த பரிந்துரைகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவது மற்றும் தொற்றுநோய் மேலாண்மை குறித்த பயிற்சி திட்டங்களை நடத்துதல் ஆகியவை அடங்கும்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை ஆகஸ்டில் நடைபெறும், அதே நேரத்தில் புதிய கல்வியாண்டு செப்டம்பர் முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு முன்பு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும், கல்வி நிலைய வளாகத்திற்குள் நுழைய தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!